கேஎஸ் பரத் வேண்டாம், பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ரிஷப் பண்ட்டுக்கு பதில் அவர் தான் சரியானவர், சபா கரீம் கோரிக்கை

Rishabh Pant Saba Karim
Advertisement

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் களமிறங்கும் இந்தியா அடுத்ததாக பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் ஏற்கனவே இந்தியா புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதனால் அத்தொடரில் ஏதோ ஒரு வகையில் வென்றால் மட்டுமே 2023 ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற போராட உள்ளது.

Rishabh-Pant

ஆனால் தற்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் அத்தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளதால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் என்னதான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் தோனியை மிஞ்சி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ள அவர் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வென்று சரித்திரம் படைக்க காபாவில் வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடி முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பரத் வேண்டாம்:
மேலும் சமீபத்திய வங்கதேச தொடரில் கூட அதிரடியாக செயல்பட்ட அவர் அவர் 2022ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதித்து இன்றியமையாதவராக உருவாக்கியுள்ளார். இருப்பினும் துரதிஷ்டவசமாக காயத்தால் வெளியேறும் அவருக்கு பதிலாக ஏற்கனவே பேக்அப் விக்கெட் கீப்பராக வளர்க்கப்பட்ட கேஎஸ் பரத் அறிமுகமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முன் இந்தியாவுக்காக பெரிய அளவில் விளையாடிய அனுபவமில்லாத கேஎஸ் பரத் மெதுவாக விளையாடக் கூடியவர் என்று முன்னாள் வீரர் சபா கரீம் கூறியுள்ளார்.

Ishan Kishan 1

எனவே ரிஷப் பண்ட் இடத்தில் அவரைப் போலவே அதிரடியாக விளையாடுவதற்கு இசான் கிசானைத் தவிர வேறு சரியான மாற்று வீரர் இருக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்படுவதற்கு கேஎஸ் பரத் வளர்க்கப்பட்டுள்ளார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் மீது எனக்கு எந்த மரியாதை குறைவும் கிடையாது. ஆனால் என்னைப் பொறுத்த வரை ரிஷப் பண்ட்டுக்கு பதிலான சரியான மாற்று வீரர் இசான் கிசான் என்று கருதுகிறேன்”

- Advertisement -

“குறிப்பாக டெஸ்ட் அணியில் பண்ட் அதிரடியாக விளையாடுவதைப் போல் அவர் ரஞ்சி கோப்பையில் அதிரடியாக சதமடித்தார். சமீப காலங்களில் நாம் சிறந்த டெஸ்ட் வெற்றிகளை பெறுவதற்கு ரிஷப் பண்ட் அணியில் இருந்தது மட்டும் காரணமல்ல. அவர் விளையாடிய நிறைய மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்கள் அதிரடியான வேகத்தில் அடிக்கப்பட்டதாகும். அந்த வேகம் எதிரணி மீது அழுத்தத்தை போடும் என்பதுடன் நமது பவுலர்கள் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்கு தேவையான நேரத்தையும் கொடுக்கும். மேலும் இஷான் கிசான் இந்தியா ஏ அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றாலும் உள்ளூர் அளவில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்”

Karim

“அதே போல் சஞ்சு சாம்சுனையும் நாம் கருதலாம். எனவே இதில் இந்திய தேர்வுக்குழுவினர் தான் எந்த விக்கெட் கீப்பர் நமக்கு சரியாக இருப்பார் என்று தேர்வு செய்ய வேண்டும். தேர்வு குழுவினருக்கு பரத், சாம்சன், கிசான் போன்ற வீரர்கள் இருப்பதால் கவலையும் இல்லை. எனவே அவர்கள் யாரையாவது தேர்வு செய்வார்கள். அதே சமயம் ரிசப் பண்ட் முதலில் குணமடைந்து வரவேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்கசுமாராய் போன 2022இல் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த 7 மகிழ்ச்சியான மறக்க முடியாத தருணங்கள்

அவர் கூறுவது போல சமீபத்திய வங்கதேச ஒருநாள் தொடரில் அதிவேகமாக இரட்டை சதமடித்த இஷான் கிசான் அடுத்து நடைபெற்ற ரஞ்சிக்கோப்பையிலும் வேகமாக சதமடித்தார். எனவே தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் அவர் தான் ரிசப் பண்ட் போல அவரது இடத்தில் அதிரடியாக விளையாடுவதற்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement