சுமாராய் போன 2022இல் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த 7 மகிழ்ச்சியான மறக்க முடியாத தருணங்கள்

U19 World Cup 2022 Under 19
- Advertisement -

2023 ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதிலும் கோலாகலமாக பிறந்துள்ள நிலையில் அதை அனைத்து மக்களும் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். அதற்கு முன் 2022ஆம் ஆண்டு அனைவருக்கும் சில பின்னடைவுகள் இருந்தாலும் நிறைய மலரும் நினைவுகளும் கிடைத்ததில் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியாவுக்கு 2022ஆம் ஆண்டு சுமாராகவே அமைந்தது. இருப்பினும் 2022 சுமாராக அமைந்தாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அளவுக்கு சில முக்கிய மறக்க முடியாத நிகழ்வுகளும் வெற்றிகளும் பரிசாக கிடைத்தது. அவைகளைப் பற்றி பார்ப்போம்:

1. உலக சாம்பியன்: கிரிக்கெட்டின் வருங்கால ஹீரோக்களை அடையாளப்படுத்தும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றில் 14 முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்றது. அதில் டெல்லியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் யாஸ் துள் தலைமையில் அசத்தலாக செயல்பட்ட இந்தியா ஃபைனலில் இங்கிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

அத்துடன் மொத்தமாக 5 கோப்பைகளை வென்றுள்ள இந்தியா அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாகவும் சரித்திர சாதனை படைத்தது. அந்த வகையில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாகும்.

2. பும்ராவின் மாஸ்: கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் பும்ரா தலைமையில் ஏமாற்றத் தோல்வியை சந்தித்த இந்தியா 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

- Advertisement -

இருப்பினும் அப்போட்டியில் எப்படியாவது இவரை அவுட்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பவுன்சர்களுடன் ஸ்டுவர்ட் ப்ராட் வீசிய ஒரு ஓவரை தைரியமாக எதிர்கொண்ட ஜஸ்ப்ரிட் பும்ரா 35 ரன்களை பறக்க விட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பிரைன் லாராவின் சாதனையைத் தவிர்த்து உலக சாதனை படைத்தது இந்திய ரசிகர்களின் நெஞ்சை நிமிர்த்தியது.

3. இங்கிலாந்தில் வெற்றி: அதைத்தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தை 2 – 1 (3) என்ற கணக்கில் சாய்த்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஒருநாள் தொடரையும் கடைசி போட்டியில் ரிசப் பண்ட் சதமடித்த (125*) உதவியுடன் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது.

- Advertisement -

அந்த வகையில் டெஸ்ட் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிரட்டலாகவும் சொந்த மண்ணில் வலுவாகவும் திகழும் இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பை வென்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

4. வெள்ளி மங்கையர்கள்: அடுத்த சில மாதங்களில் அதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. டி20 வடிவில் நடைபெற்ற அத்தொடரில் அசத்தலாக செயல்பட்ட ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா பைனலில் வழக்கம் போல ஆஸ்திரேலியாவிடம் சொதப்பி தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது.

- Advertisement -

5. கிங் ரிட்டன்ஸ்: சச்சின் டெண்டுல்கருக்கு பின் ரன் மெஷினாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடும் விமர்சனங்களை சந்தித்தார்.

ஆனால் மனம் தளராமல் போராடிய அவர் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1020 நாட்கள் கழித்து சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார். அவரது சதத்தால் ஆசிய கோப்பை தோல்வியை மறந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து கொண்டாடினார்கள்

6. கிங் மாஸ்டர்க்ளாஸ்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முதல் போட்டியிலேயே பரம எதிரி பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பியதால் 31/4 என சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது.

அப்போது பாண்டியவுடன் நங்கூரமிட்டு வரலாற்றின் மிகச்சிறந்த டி20 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி 82* ரன்கள் குவித்து காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஹாரிஸ் ரவூப் ஓவரில் அவர் பறக்க விட்ட அடுத்தடுத்த சிக்சர்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் பினிஷிங் செய்த விதமும் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. இந்த வருடம் அதுதான் இந்திய கிரிக்கெட்டின் உச்சகட்ட நிகழ்வு என்றும் சொல்லலாம்.

7. அதிரடி கிசான்: வங்கதேசத்துக்கு எதிராக டிசம்பரில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா கடைசி போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார ஆறுதல் வெற்றி பெற்று ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்து.

இதையும் படிங்கIND vs SL : இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் எப்போது துவங்குகிறது? – எந்த சேனலில் பார்க்கலாம்?

அதற்கு 210 (131) ரன்கள் குவித்த இசான் கிசான் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக இரட்டை உலக சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

Advertisement