IND vs SL : இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் எப்போது துவங்குகிறது? – எந்த சேனலில் பார்க்கலாம்?

Hardik-Pandya
- Advertisement -

அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியனாது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் இழந்தது. இப்படி இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆறுதல் அளித்தது.

IND vs SL

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அணியானது இங்கு இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது இந்தியாவில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது வரும் ஜனவரி 3-ஆம் தேதி மும்பையிலும், 2 ஆவது டி20 போட்டி ஜனவரி 5-ஆம் தேதி புனேவிலும், 3 ஆவது டி20 போட்டியானது ஜனவரி 7-ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெறவுள்ளது. இந்த 3 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

IND vs SL Arsheep Singh

அதேபோன்று இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு மொழிகளிலும் இந்த தொடரானது வர்ணனை செய்யப்படவுள்ளது. மேலும் ஆன்லைனில் போட்டிகளை காண விரும்புவோர் ஹாட் ஸ்டார் ஆப்பின் மூலம் கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்டிற்கு பதிலாக டெஸ்ட் அணியின் புதிய விக்கெட் கீப்பர் யார் தெரியுமா? – இவருக்குத்தான் வாய்ப்பு

இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செயல்பட இருப்பதாலும் முற்றிலும் இளம்வீரர்களை கொண்ட அணியே இந்த தொடரில் விளையாட இருப்பதினாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு சீனியர் வீரர்கள் இல்லாத இந்த பயமற்ற இளம் அணி நிச்சயம் இலங்கை அணியை வீழ்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement