ரிஷப் பண்டிற்கு பதிலாக டெஸ்ட் அணியின் புதிய விக்கெட் கீப்பர் யார் தெரியுமா? – இவருக்குத்தான் வாய்ப்பு

Rishabh-Pant
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயங்கள் குணமடைந்து அவர் சாதாரணமாக செயல்படவே 5-6 மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக டெல்லி அல்லது மும்பை நகரத்துக்கு மாற்றப்பட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Rishabh-Pant

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் ரிஷப் பண்ட் தவறவிட இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை கீப்பருக்கான முதல் தேர்வாக இருக்கும் ரிஷப் பண்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை அணி நிர்வாகத்திற்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு பதிலாக அவரது இடத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரப்பப்போகும் வீரர் யார் என்ற கேள்வியே அதிக அளவு எழுந்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்டின் இடத்தை நிரப்ப 3 வீரர்கள் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் டெஸ்ட் கீப்பருக்கான போட்டியில் கே.எஸ் பரத், உபேந்திரா யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

bharat 1

இந்த 3 வீரர்களில் கே.எஸ் பரத்துக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக இடம்பிடித்து பயணித்து வரும் அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் அவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று உபேந்திரா யாதவ் உள்ளூர் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அசத்தி வருவதால் அவரது பெயரும் ரிஷப் பண்டின் இடத்திற்கு மாற்றுவீரருக்கான போட்டியில் உள்ளது. மேலும் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைசதம் அடித்து அசத்திய இஷான் கிஷனின் பெயரும் இந்த போட்டியில் உள்ளது ஆனால் இவர்கள் இருவரை தாண்டியும் கே.எஸ் பரத் தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் பயணித்து வருவதால் அவருக்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மா இல்ல – 2022ஆம் ஆண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட்டர்கள் இவங்க தான், பிசிசிஐ வெளியிட்ட பட்டியல் இதோ

அதேபோன்று டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக தேர்வுசெய்ய இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது பெயர் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தாலும் அவர்கள் இருவரும் ரஞ்சி போட்டியில் முழுநேர பேட்ஸ்மேன்களாகவே விளையாடியதால் அவர்கள் இருவருக்கும் கீப்பர் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. எனவே நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எஸ் பரத் இடம்பிடிப்பது உறுதி.

Advertisement