ஐபிஎல்க்கு நிகராக ரஞ்சிக் கோப்பை வீரர்களுக்கு 3 மடங்கு சம்பளம்.. பிசிசிஐ கையிலெடுக்கும் புதிய திட்டம்

Ranji IPL
- Advertisement -

இந்திய அணிக்காக 2023 – 24 காலண்டரில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் மத்திய சம்பள ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்ற காரணத்திற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிசான் ஆகிய 2 வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த முடிவு ரஞ்சிக் கோப்பையை புறக்கணிக்கும் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளதாக வரவேற்பு காணப்படுகிறது.

முன்னதாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வந்தது முதல் ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் விளையாடுவதற்கு இந்திய வீரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் 2 மாதம் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பல கோடி ரூபாய்கள் சம்பளமாக கிடைக்கிறது. ஆனால் ரஞ்சிக் கோப்பை போன்ற அனைத்து விதமான உள்ளூர் தொடர்களில் விளையாடினாலும் ஒரு வருடத்தில் ஒரு கோடி கூட சம்பளமாக கிடைப்பதில்லை.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு நிகராக:
இந்நிலையில் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் மீண்டும் இந்திய வீரர்கள் ஆர்வத்துடன் விளையாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பிசிசிஐ எடுக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒரு வருடத்தில் நடைபெறும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் முழுமையாக விளையாடி இந்தியாவுக்காக அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு 15 கோடி சம்பளமாக கொடுக்கும் திட்டத்தை பிசிசிஐ தயார் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அது ஐபிஎல் தொடரில் விராட் கோலி போன்றவர்கள் வாங்கும் 15 கோடி சம்பளத்துக்கு நிகரானதாகும். அந்த வகையில் உள்ளூர் கிரிக்கெட்டின் மீது மீண்டும் வீரர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தயார் செய்யப்படும் இந்த திட்டம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “இந்திய அணி நிர்வாகத்திடமிருந்து வாரியம் பரிந்துரைகளை கேட்டுள்ளது”

- Advertisement -

“உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டின் புனிதன்மையை பராமரிப்பதில் அவர்கள் மிகவும் ஆக்ரோசமான அணுகுமுறையை எடுத்து வருகின்றனர். முதல் தர கிரிக்கெட்டில் ஈடுபாடு கொண்ட வீரர்களுக்கு ஐபிஎல் தொடருக்கு நிகரான அளவில் வெகுமதி வழங்கப்படுவது அவசியமாகிறது. அதற்கு தற்போதுள்ள சம்பளத்தை பல மடங்கு உயர்த்த வேண்டியுள்ளது. முதல் தர போட்டிகளின் சம்பளத்தை 3 மடங்கு உயர்த்த பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது”

இதையும் படிங்க: எங்களோட தரமான ஸ்பின்னரை கண்டுப் பிடிச்சுட்டோம்.. அவர் தான் புதிய அஸ்வின்.. புகழ்ந்த மைக்கேல் வாகன்

“அதன் படி ஒரு வீரர் ரஞ்சிக் கோப்பை முழுவதும் விளையாடினால் அவருக்கு ஐபிஎல் தொடரின் அடிப்படை ஒப்பந்தத்திற்கு நிகரான 75 லட்சம் கிடைக்கும். அதே போல ஒரு வருடத்தில் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் விளையாடினால் அந்த வீரரால் ஐபிஎல் தொடருக்கு நிகராக 15 கோடி வரை சம்பளமாகப் பெற முடியும். இந்த புதிய பரிந்துரைகளை ஒரே முயற்சியில் வாரியம் எடுத்துக் கொள்ளாது. அவர்கள் வீரர்களுடன் சந்திப்பு நிகழ்த்துவார்கள். பின்னர் அதற்குத் தகுந்த முடிவை எடுப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement