தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஒருநாள் போட்டிக்கும் புதிய கேப்டன் – அப்போ கோலியின் நிலைமை?

Ind
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த 2019-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற கொல்கத்தா டெஸ்டில் அடித்த சதத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். அது மட்டுமின்றி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அவர் கேப்டனாக செயல்படுவதால் அவரது பேட்டிங் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பலரும் நினைக்கின்றனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருடன் பணிச்சுமை காரணமாக விராட் கோலி டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

Rohith

- Advertisement -

அதனால் தற்போது இந்தியாவில் அடுத்த வாரம் துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு அடுத்த சில நாட்களிலேயே இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடைபெறவிருக்கும் இந்த தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி-20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்தும் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்படும் என்று தெரிகிறது.

Kohli

அதன்படி பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான தகவலின் படி விரைவில் பிசிசிஐ நிர்வாகம் ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் ஒருநாள் அணிக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க ஆலோசிக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் மேத்யூ ஹெய்டனின் சாதனையை முறியடித்த பாபர் அசாம் – முழுவிவரம் இதோ

அதன்படி தென் ஆப்ரிக்க தொடரில் ரோகித் சர்மா ஒருநாள் போட்டியின் கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில் விராட் கோலி அணியில் ஒரு பேட்ஸ்மேனாகவே தொடர்வார் என்று தெரிகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை எந்த வித மாற்றமும் இன்றி கோலி தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement