விராட் கோலி மற்றும் மேத்யூ ஹெய்டனின் சாதனையை முறியடித்த பாபர் அசாம் – முழுவிவரம் இதோ

Azam

நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பையில் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மிகப்பெரிய சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார். அதன்படி நேற்றைய போட்டியில் 34 பந்தில் 39 ரன்கள் குவித்த பாபர் அசாம் தனது 32-வது ரன்னை தொட்ட போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 2500 ரன்களை எடுத்தார். இந்த 2500 ரன்களை தொட அவர் வெறும் 62 இன்னிங்ஸ்களே எடுத்துக்கொண்டுள்ளார்.

azam 1

இதற்கு முன்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி வைத்திருந்தார். 68 இன்னிங்ஸ்களில் கோலி 2500 ரன்களை எட்டி இருந்தார். ஆனால் தற்போது அதனை தனது 62-வது இன்னிங்சிலே பாபர் அசாம் கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 62 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 2507 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 24 அரை சதம் அடங்கும். அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் 48 ரன்கள் சராசரியையும் இவர் வைத்துள்ளார். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் தற்போது பாபர் அசாம் ஏழாம் இடத்திற்கு சென்றுள்ளார்.

இந்த பட்டியலில் விராட் கோலி 3227 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு சாதனையாக பாபர் அசாம் படைத்துள்ள சாதனை யாதெனில் அறிமுக டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அறிமுகமான பாபர் அசாம் தனது அறிமுக தொடரிலேயே 303 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஒருவழியா இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் – யார் இந்த கே.எஸ்.பரத் ?

இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிமுக உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் 275 ரன்கள் அடித்து இருந்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது அதனை பாபர் அசாம் முறியடித்துள்ளார். இந்த தொடரில் 6 ஆட்டத்தில் விளையாடியுள்ள அவர் 4 அரைசதங்களுடன் 303 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement