ஓமைக்ரான் பரவலால் திட்டமிட்டபடி ஐ.பி.எல் நடைபெறுமா? – பி.சி.சி.ஐ வைத்திருக்கும் பிளான் பி (என்ன தெரியுமா?)

IPL-1
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கும் 15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஏற்கனவே அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பிப்ரவரி மாதம் வீரர்களின் மெகா ஏலமும் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு பக்கம் ஐபிஎல் தொடருக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் இந்தியாவில் பொருளாதார மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

IPL
IPL Cup

இதன் காரணமாக இந்த வருடமும் ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ இந்தாண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதே முக்கியம் என்று அதற்கான வேலைகளை பார்த்து வருகிறது.

- Advertisement -

இப்போதைக்கு மெகா ஏலத்தை நடத்தி முடித்தாக வேண்டும் என்ற கவனத்தில் இருக்கும் பிசிசிஐ அதன்பிறகு இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாத பட்சத்தில் பிளான் பி என்ற ஒரு திட்டத்தை வைத்து உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது கொரோனா பரவல் குறித்த செய்திகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Dubai

ஏப்ரல் மாதம் நெருங்கும்போது இவை எல்லாம் தொகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் ஐபிஎல் தொடர் நடைபெறும் வேளையில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை நடத்தும் திட்டம் பிளான் பி குறித்து அந்த நேரத்தில் கலந்த ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியின் கேப்டனான அவர் என்னை சூதாட்டத்தில் ஈடுபட பேரம் பேசினார் – ஷேன் வார்ன் புகார்

அதற்கு முன்னர் அனைத்து மாநில அரசுகளின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து அதன்பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement