பாகிஸ்தான் அணியின் கேப்டனான அவர் என்னை சூதாட்டத்தில் ஈடுபட பேரம் பேசினார் – ஷேன் வார்ன் புகார்

Warne
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் 1992-ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளிலும், 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவர் தற்போது தனது கிரிக்கெட் கரியரில் நடைபெற்ற மறக்க முடியாத தருணங்களை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

Warne

- Advertisement -

அதன்படி 1994 ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தானில் விளையாடிய போது நடைபெற்ற மேட்ச் பிக்சிங் அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறுகையில் : 1994 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

அப்போதுதான் முதல்முறையாக நான் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுகிறேன். அந்த டெஸ்ட் போட்டியின்போது ஒருநாள் ஆட்டம் முடிவடைந்ததும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சலீம் மாலிக் என்னை ஆட்ட நேரம் முடிந்த பிறகு ஹோட்டலில் வந்து பார்க்கும்படி அழைத்தார். அவர் அழைத்ததின் பேரில் நானும் அன்றைய போட்டி முடிந்ததும் அவரை சென்று பார்த்தேன். அப்போது போட்டியில் நீ சிறப்பாக விளையாடினாய் என்று என்னை பாராட்டினார்.

saleem malik

அதனை தொடர்ந்து அவர் பேசிய சில வார்த்தைகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்த டெஸ்டில் நாங்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். நாங்கள் தோற்று விட்டால் எங்களது ரசிகர்கள் எங்களது வீட்டையும், உறவினர்கள் வீட்டையும் எரித்து விடுவார்கள். எனவே நீங்கள் தோற்று விடவேண்டும் என்று என்னிடம் கூறினார். அதுமட்டுமின்றி கடைசி நாளில் நீ பந்துவீசும் போது விக்கெட் வீழ்த்தும் படி பந்துவீச கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : மொதல்ல கேப்டன மாத்துனாதான் உங்களால ஜெயிக்க முடியும் – ஆலோசனை வழங்கிய ரிக்கி பாண்டிங்

மேலும் குறிப்பிட்ட அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றால் அதற்கு சன்மானமாக ஒன்றரை கோடி ரூபாய் தருவதாகவும் பேரம் பேசினார். ஆனால் நான் அவரை திட்டிவிட்டு மீண்டும் எங்கள் அறைக்கு திரும்பி விட்டேன் என்று ஷேன் வார்ன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement