மொதல்ல கேப்டன மாத்துனாதான் உங்களால ஜெயிக்க முடியும் – ஆலோசனை வழங்கிய ரிக்கி பாண்டிங்

Ponting
- Advertisement -

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே மிகப் பெரிய கவுரவமாக பார்க்கப்படும் இந்த ஆஷஸ் தொடரானது ஆண்டுதோறும் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. அதன்படி இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் இந்த ஆஷஸ் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன.

aus vs eng

- Advertisement -

இவ்வேளையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி அபாரமான வெற்றியை பெற்று 3 க்கு 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஏனெனில் போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 358 ரன்கள் தேவை. ஆனால் இந்த இலக்கினை நெருங்குவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதனால் இங்கிலாந்து கிட்டத்தட்ட தோல்விக்கு அருகில் சென்று விட்டது என்றே கூறலாம். இந்நிலையில் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப அந்த அணியில் கேப்டன் மாற்றம் தேவை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Stokes

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த சில தொடர்களாகவே இங்கிலாந்து அணி பெற்ற தோல்விகளின் எதிரொலி காரணமாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்த நேரத்தில் அணிக்கு நிச்சயம் கேப்டன் மாற்றம் என்பது அவசியமான ஒன்று.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்டில் ஷ்ரேயாஸ் மற்றும் விஹாரிக்கு வாய்ப்பு உண்டா? – டிராவிட் அளித்த தெளிவான பதில்

அந்த வகையில் இந்நேரத்தில் இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டால் அவர்களால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement