தோல்வி எதிரொலி : ரோஹித்துக்கு செக் வைத்த பி.சி.சி.ஐ. நாடு திரும்பியதும் – நடக்கவுள்ள மீட்டிங்

BCCI-and-Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியோடு வெளியேறிய இந்திய அணிக்கு தற்போது கடும் எதிர்ப்பலைகள் கிளம்பி வருகின்றன. இந்திய அணியில் மூத்த வீரர்கள் மற்றும் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது தற்போது அதிக அளவில் விமர்சனங்களை எழுப்பிள்ளது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்த தோல்விக்கு பிறகு பேசிய பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில் :

IND

- Advertisement -

மூத்த வீரர்களின் எதிர்காலம் பற்றி தற்போது பேசுவது சரியான விடயம் கிடையாது. இதுகுறித்து இனி யோசிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ள வேளையில் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் டிராவிட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்கள் மூவரும் இந்தியா திரும்பியவுடன் உடனடியாக பிசிசிஐ அவர்கள் மூவருடனும் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பி.சி.சி.ஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் : தற்போது இந்திய நிர்வாகம் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க விரும்பவில்லை. ஆனாலும் டிராவிட், ரோஹித், கோலி ஆகியோர் நாடு திரும்பியதும் டி20 அணியின் எதிர்காலம் குறித்த கூட்டத்தில் அவர்கள் மூவரிடம் பேச உள்ளோம்.

rohith

அதன் பின்னரே டி20 இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால திட்டம் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதனை அனைத்தையும் பிசிசிஐ கட்டாயமாக செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டியின் மூலம் இந்திய அணியின் சீனியர் வீரர்களான தினேஷ் கார்த்திக் (37), அஷ்வின் (36), ரோகித் சர்மா (35), விராட் கோலி (33), புவனேஸ்வர் குமார் (32), முகமது ஷமி (32) ஆகியோர் டி20 தொடரில் இருந்து புறக்கணிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

- Advertisement -

அதேவேளையில் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை கொண்டு வந்து அடுத்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக்காக தற்போதே அணியை பலப்படுத்த ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக தற்போது 36 வயதை எட்டியுள்ள ரோகித் சர்மா இனியும் டி20 அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு இல்லை என்றும் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து தொடருக்காக நியமிக்கப்பட்டதால் அவரே இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய இந்திய அணிக்கு கிடைத்த பரிசுத்தொகை – எவ்வளவு தெரியுமா?

இதன் மூலம் தற்போது ரோகித் சர்மாவின் டி20 கேப்டன்சி பதவிக்கு பிசிசிஐ நேரடியாக செக் வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு இனி மூத்த வீரர்கள் அனைவர்க்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்றும் டி20 அணியில் இளம்வீரர்களே இடம்பிடிப்பார்கள் என்றும் தெரிகிறது.

Advertisement