சுப்மன் கில்லின் காயம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பி.சி.சி.ஐ – என்ன ஆச்சு அவருக்கு?

Gill-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 44 ரன்கள் அடித்திருந்தார். இந்நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவதாக தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய போது ஷார்ட் லெக் திசையில் இருந்த அவர் நியூசிலாந்து வீரர் அடித்த பந்து கையில் பட்டு வலியால் துடித்தபடி வெளியேறினார்.

அதன் பிறகு அவர் மீண்டும் பீல்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. மேலும் தற்போது இந்திய அணி விளையாடி வரும் 2வது இன்னிங்சிலும் அவர் துவக்க வீரராக நேற்று கலங்காமல் இன்று மூன்றாம் நாள் காலை அகர்வால் ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சுப்மன் கில்லின் காயம் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு அப்டேட்டில் : அவருக்கு வலது கையில் முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் முதல் இன்னிங்ஸின் போது பீல்டிங் செய்ய வரவில்லை என்றும் முன்னெச்சரிக்கை காரணமாகவே அவர் பீல்டிங் செய்யாமல் அமர வைக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளது.

தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னர் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான் சுப்மன் கில் பேட்டிங் செய்ய கடைசி வாய்ப்பு என்பதனால் தற்போது அவர் இரண்டாவது இன்னிங்சில் 3வது வீரராக களமிறங்கி புஜாராவுடன் தற்போது விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : மெகா ஏலத்திற்கு முன்னதாகவே கேப்டனாக மாறுகிறாரா சுரேஷ் ரெய்னா ? – குறிவைத்த முன்னணி அணி

தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் பேக்அப் ஓப்பனராக நிச்சயம் சுப்மன் கில் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement