மெகா ஏலத்திற்கு முன்னதாகவே கேப்டனாக மாறுகிறாரா சுரேஷ் ரெய்னா ? – குறிவைத்த முன்னணி அணி

Raina
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் 15-வது ஐபிஎல் சீசனுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள இருக்கும் 8 அணிகளும் தலா நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டும் என்றும் மற்ற வீரர்கள் அனைவரும் மெகா ஏலத்திற்கு செல்வார்கள் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று ஐபிஎல் அணிகள் தங்களது அணிகளில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட கடைசி தேதி என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது.

csk

- Advertisement -

இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களை வெளியிட்டு விட்டது. அதன்படி சிஎஸ்கே அணியில் முதல் வீரராக ஜடேஜா, இரண்டாவது வீரராக தோனியும் தக்கவைக்கப்பட்டனர். 3வது வீரராக மொயின் அலி மற்றும் 4-வது வீரராக ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வைக்கப்பட்டனர்.

சென்னை அணியின் பல பிரபலமான வீரர்கள் கழட்டி விடப்பட்ட நிலையில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவை தக்கவைக்காதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சென்னை அணிக்காக ஆரம்ப காலத்திலிருந்தே அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரெய்னாவை இம்முறை அணியில் தக்க வைக்காதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

raina 1

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய உள்ள அகமதாபாத் மணி மெகா ஏலத்திற்கு முன்னரே அணியில் எடுத்து கேப்டனாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி உள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் உள்ளதால் அவரை கேப்டனாக மாற்றி அவருக்கு கீழ் இளம் வீரர்களை வைத்து அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை டெஸ்ட் : பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட – இதுதான் காரணம்

அதோடு மட்டுமின்றி சுரேஷ் ரெய்னாவிற்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதாலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் நிறைய அனுபவம் உள்ளதாலும் அகமதாபாத் அணிக்கு கேப்டனாக மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் எப்போதுமே சிஎஸ்கே அணிக்காக விளையாடி பழக்கப்பட்ட ரெய்னா இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.

Advertisement