மும்பை டெஸ்ட் : பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட – இதுதான் காரணம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 325 ரன்கள் குவிக்க அடுத்ததாக நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய போது துவக்கத்திலிருந்தே இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சவாலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ajaz 1

- Advertisement -

முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்களில் சுருண்டு மோசமான சரிவை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி 263 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் எடுக்கப்பட்ட குறைந்த ஸ்கோராக இந்த ஸ்கோர் அமைந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியின் போது எளிதாக இந்திய அணி எடுத்திருக்க வேண்டிய பாலோ ஆனை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மறுத்தது அனைவரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் டெஸ்ட் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறும் போது பாலோ ஆன் எடுத்துக் கொள்ளலாம் என்பது ஒரு விதிமுறை. அதாவது நாம் 200 ரன்கள் முன்னிலை பெரும்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடாமல் எதிரணி விளையாட வைக்கலாம். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி 263 ரன்கள் முன்னிலை பெற்றும் விராட் கோலி பாலோ ஆன் செய்யாதது ஏன் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

Rachin

அதன்படி ஏற்கனவே முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் இருக்கும் வேளையில் 4வது மற்றும் 5வது நாளில் பேட்டிங் செய்யவே கடினமாக இருக்குமென்பதால் இந்திய அணி பாலோ ஆனை மறுத்திருக்கலாம். அதேபோன்று ஏற்கனவே நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் கிட்டத்தட்ட 110 ஓவர்கள் பந்துவீசிய நிலையில் மீண்டும் அவர்களைத் தொடர்ந்து பந்துவீச வைக்கும் போது அவர்கள் உடல் அளவில் சோர்வு அடைவார்கள் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : எதிரணி வீரராக இருந்தாலும் தேடிச்சென்று வாழ்த்திய விராட் கோலி மற்றும் டிராவிட் – வைரலாகும் வீடியோ

மேலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்னர் இந்த ஒரு இன்னிங்ஸ் தான் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய கடைசி வாய்ப்பு என்பதால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பரிசோதிக்கவும் கோலி இதுபோன்ற முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement