எதிரணி வீரராக இருந்தாலும் தேடிச்சென்று வாழ்த்திய விராட் கோலி மற்றும் டிராவிட் – வைரலாகும் வீடியோ

Ajaz-5
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ஆம் தேதி நேற்று மும்பை மைதானத்தில் துவங்கியது. மழை காரணமாக இந்த போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்து இருந்தது. முதல் நாளில் விழுந்த 4 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் வீழ்த்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்ற வேளையில் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் மாயங்க் அகர்வால் 150 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்த முதல் இன்னிங்சில் மொத்தம் 47.5 ஓவர்கள் வீசிய அவர் 12 மெய்டன்களுடன் 119 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அவரது இந்த சிறப்பான பந்து வீச்சின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். அதன்படி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள லேக்கர் மற்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே ஆகியோருடன் 10 விக்கெட் வீழ்த்திய சாதனையில் தற்போது இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய அஜாஸ் படேலின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் நேராக நியூசிலாந்து அணியின் ஓய்வறைக்கு சென்று அவரின் சாதனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதோடு எதிரணி வீரராக இருந்தாலும் அவரது சாதனையை மதித்து அவருக்கு நேரில் சென்று வாழ்த்திய இவர்கள் இருவரின் நேர்த்தியான செயல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement