ஜடேஜாவை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யாதது ஏன்? – பி.சி.சி.ஐ கொடுத்த அப்டேட்

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவை முடிவடைந்த பின்னர் தற்போது இந்திய அணியானது நாடு திருப்பியுள்ளது. அடுத்ததாக பிப்ரவரி 6-ஆம் தேதி துவங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

அதில் ஏற்கனவே நியூசிலாந்து தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரை தவறவிட்ட ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மீண்டும் அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி அவர் இந்த தொடரில் இடம்பெறாமல் போனதன் காரணம் குறித்து பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவே முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறிய ஜடேஜா தற்போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். தற்போது காயத்தில் இருந்து மீண்ட அவர் தனது பிட்னஸ்ஸை நிரூபிக்கும் கடைசி கட்டத்தில் இருக்கிறார்.

எனவே அவர் இந்த தொடரில் இடம் பெறவில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக நிச்சயம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் தொடரில் ஜடேஜா அணியில் இணைவார் என்று தெரிகிறது. அதேபோன்று இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் ஒருநாள் போட்டியில் கே.எல் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இரண்டாவது போட்டியில் இருந்து அவர் அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இவர்களால் இந்திய அணியின் கேப்டனாக இருக்கவே முடியாது – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

மற்றபடி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ஜடேஜா அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement