இவர்களால் இந்திய அணியின் கேப்டனாக இருக்கவே முடியாது – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

Shastri-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி சமீபத்தில் வெளியேறினார். தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததை அடுத்து அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். ஏற்கனவே டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியை ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து அவர் வெளியேறி உள்ளதால் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட இருக்கிறார்.

kohli

- Advertisement -

இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆகியவற்றிற்கு ரோகித் சர்மா புதிய நியமிக்கப்பட்டுள்ள வேளையில் டெஸ்ட் அணிக்கு விரைவில் கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இது குறித்து பல்வேறு பேச்சுக்கள் அடிபட்டு வரும் வேளையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தனக்கு டெஸ்ட் கேப்டன்சி கிடைத்தால் அதை கௌரவமாக ஏற்றுக் கொண்டு சிறப்பாக வழிநடத்துவேன் என்று கூறியுள்ளார்.

அதேபோன்று இந்திய அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் தனக்கு கேப்டன்சி பதவி வழங்கப்பட்டால் அதை ஏற்று எந்தவிதக் குறையும் இன்றி செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருப்பது வேலைக்காகாது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக இருப்பது கடினம்.

bumrah 2

ஏனெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ற அடிப்படையில் கேப்டனை நியமிக்க முடியாது. இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்தால் முடியும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதுமே ஆக்ரோஷத்துடன் இருப்பவர்கள். போட்டியில் வெற்றி பெறவும், விக்கெட் வீழ்த்தவும் அவர்கள் முயல்வார்கள். அதைத்தவிர அவர்களால் அணியை கொண்டு செல்ல முடியுமா? என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணிக்கு தேர்வான 21 வயது இளம்வீரரின் வீட்டின் முன்பு – ரசிகர்கள் நடனமாடி கொண்டாட்டம்

கபில்தேவ், இம்ரான்கான் போன்றவர்கள் தங்களது அணியை சிறப்பாக வழி நடத்தி உள்ளனர். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை விட, வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் கேப்டன்சி செய்ய நல்ல வாய்ப்பு இருப்பதாகவும், முழுநேர வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக மாறுவது என்பது அரிதான ஒரு விடயம் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார். ஆனால் தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement