
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
அதனை தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதேபோன்று மற்றொரு இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது துபாயில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றுவதோடு ஐசிசி தரும் பெரிய பரிசு தொகையையும் கைப்பற்ற இருக்கிறது.
இந்நிலையில் ஒருவேளை இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் பட்சத்தில் நிச்சயம் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அவர்களுக்கு ஒரு பெரிய பரிசுத்தொகையை அன்பளிப்பாக வழங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணி வென்றால் பி.சி.சி.ஐ எவ்வளவு பெரிய தொகை கொடுக்கும் என்று குறித்த தகவலை இங்கு காணலாம்.
அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும்போது இந்திய அணி வீரர்களுக்கு 120 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. அது தவிர்த்து பயிற்சியாளர்கள் குழுவிற்கும் தனியாக பெரிய தொகை வழங்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அதே தொகை தான் இந்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றாலும் இந்திய அணிக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியாவுக்காக விராட், ரோஹித் 2028 தங்கத்தை ஜெய்ப்பாங்க.. ஓய்வு பெற சொல்லாதீங்க.. ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் கோரிக்கை
ஏற்கனவே 2019 ஆன் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரின் போது நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து அந்த கோப்பையை தவறவிட்டது. அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இந்திய அணி அவர்களுக்கு பதிலடி வழங்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.