இந்தியாவுக்காக விராட், ரோஹித் 2028 தங்கத்தை ஜெய்ப்பாங்க.. ஓய்வு பெற சொல்லாதீங்க.. ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் கோரிக்கை

Sreesanth
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மார்ச் ஒன்பதாம் தேதி துபாயில் நடைபெறும் அந்தப் போட்டியில் நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த வெற்றியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரில் யாரேனும் ஒருவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.

ஏனெனில் 10 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர்களால் சமீப காலங்களாகவே தொடர்ச்சியாக அசத்த முடிவதில்லை. குறிப்பாக கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திக்க அவர்கள் முக்கிய காரணமானவர்கள். அதனால் விராட், ரோஹித் ஓய்வு பெற நேரம் வந்து விட்டதாக ஒரு தரப்பு இந்திய ரசிகர்களே விமர்சித்தார்கள்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் கோரிக்கை:

சொல்லப்போனால் 36 வயதை சராசரியாக தாண்டி விட்ட அவர்கள் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டிய நேரமும் வந்து விட்டது. அதை உணர்ந்ததாலேயே 2024 டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் தரமான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை ஓய்வு பெறுமாறு ரசிகர்கள் விமர்சிக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏனெனில் அமெரிக்காவில் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்லும் திறமை அவர்களிடம் இருப்பதாகவும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அனைவரும் விராட் கோலி பற்றி பேசுகின்றனர். ரோஹித் ஓய்வு பெறலாம் என்பதும் உங்களுக்குத் தெரியும். தயவு செய்து அவர்களைத் தொடர்ந்து விளையாட விடுங்கள்”

- Advertisement -

விளையாட விடுங்கள்:

“நாம் ஒலிம்பிக் தொடரில் வெற்றி பெறப்போகிறோம். விராட், ரோஹித் போன்ற ஒலிம்பியன்கள் நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்வதை விட சிறந்தது இருக்க முடியாது. சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் எதிரணி யாராக இருந்தாலும் இந்தியா வெல்லும். நமது அணியில் அந்தளவுக்கு நிறைய நேர்மறை சக்தி இருக்கிறது. நமது அணியினர் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள்”

இதையும் படிங்க: இனிமே இந்த ஜெர்சியை நீங்க போடக்கூடாது.. ஐ.பி.எல் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய ரூல் – விவரம் இதோ

“விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அசத்தினார்கள். எனவே வெற்றிக்காக நாம் காத்திருப்போம். நமது செயல்முறைகளில் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதையே தோனி சொல்வார். தோனி பாய் நான் விளையாடிய கேப்டன்களில் சிறந்தவர். கங்குலியும் பணிவுடன் இருந்து செயல்முறைகளை நம்புங்கள் என்று சொல்வார். அதையே தற்போதைய இந்திய அணியும் செய்து வருகிறது. கௌதம் கம்பீர் பாய் பயிற்சியாளராக நல்ல வேலையை செய்து வருகிறார்” என்று கூறினார்.

Advertisement