இனிமே இந்த ஜெர்சியை நீங்க போடக்கூடாது.. ஐ.பி.எல் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய ரூல் – விவரம் இதோ

IPL
- Advertisement -

இந்திய அணி அண்மையில் நியூசிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், அதன் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

ஐ.பி.எல் தொடரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறை :

இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்திய அணி பெற்ற இந்த அடுத்தடுத்த தோல்விகள் அணியின் நிர்வாகத்தையும் சோதித்தது. இதன் காரணமாக இந்திய அணியில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருந்த வேளையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கும் சேர்த்து புதிய விதிகளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் வெளியான அறிவிப்பின்படி : பயிற்சிக்கு செல்லும்போது கூட வீரர்கள் தங்களது அணியின் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டும் என்றும் தனியாக பிரத்யேகமாக வாகனங்களை கொண்டு வந்து அதில் பயணிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

அதோடு பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் உறவினர்கள் வீரர்களின் ஓய்வறைக்கு வரக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் மைதானத்தில் வீரர்கள் பிராக்டீஸிற்கு வரும்போது உரிய அங்கீகார அட்டை கொண்டு வர வேண்டும். அப்படி எடுத்து வர மறுத்தால் கூட அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று முடிந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் யாரும் ஸ்லீவ்லெஸ் ஜெர்சியை அணிந்து வரக்கூடாது அப்படி இந்த விதிமுறையை மீறியும் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்சியை அணிந்து வந்தால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அதன் பிறகு கண்டிப்புடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உண்மையா சொல்லனும்னா துபாய் பிட்ச்ல எங்களுக்கு அந்த ஹெல்ப் இருக்கு – முகமது ஷமி ஓபன்டாக்

எதிர்வரும் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது வரும் மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவிருக்கின்றன.

Advertisement