IND vs ZIM : ஜிம்பாப்வேயில் இந்திய வீரர்கள் குளிப்பதற்கு இப்படி ஒரு கட்டுப்பாடா? – என்ன காரணம் தெரியுமா?

IND vs WI 5th T0I
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுதினம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இம்மாத இறுதியில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த ஜிம்பாப்வே தொடருக்கு சென்றுள்ளதால் அங்கு இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

INDvsZIM

- Advertisement -

காயத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் கே.எல் ராகுல் இந்த தொடரில் பங்கேற்க இருப்பதினால் அவரது தலைமையில் இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்பதும் பெரிய அளவில் பார்க்கப்படும் விடயமாக மாறியுள்ளது.

இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பி.சி.சி.ஐ சார்பாக அறிவிக்கப்பட்டு அங்கு சென்றடைந்தது. அதனை தொடர்ந்து அங்கு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியானது நாளை மறுதினம் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே சென்று தங்கியுள்ள இந்திய அணிக்கு bcci சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Team India Jasprit Bumrah

பி.சி.சி.ஐ விதித்த அந்த கட்டுப்பாடுகளானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் நீண்ட நேரம் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வீரர்கள் வெளிநாட்டுக்கு செல்லும் போது வழக்கமாக நடத்தப்படும் நீச்சல் குளம் செஷன்களும் அங்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரான ஹராரேவில் தற்போது தண்ணீர் பஞ்சமானது தலைவிரித்து ஆடுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில் மிகவும் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் சாக்கடை தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : INDvsZIM : வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு – முதன்முறையாக வாய்ப்பை பெற்ற இளம்வீரர்

எனவே அந்நாட்டின் சூழ்நிலை காரணமாக இந்திய வீரர்கள் நீண்ட நேரம் குளிக்க கூடாது என்றும் நீச்சல் குளங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் பி.சி.சி.ஐ நல்லெண்ண அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement