ஆசிய கோப்பை 2022 : அவங்க 2 பேருக்கும் காயம் அதனாலதான் அவங்கள செலக்ட் பண்ணல – பி.சி.சி.ஐ விளக்கம்

INDIA IND vs ENG Rohit Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற முடிந்த கிரிக்கெட் தொடரினை அடுத்து நாடு திரும்பும் இந்திய வீரர்கள் மீண்டும் இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர். இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலமாக வெளியிட்டுள்ளது. அதில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இதில் முக்கிய வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோன்று ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் சில தேர்வும் இருக்கின்றன. அது மட்டுமின்றி ஒரு சில வீரர்கள் அணியில் இல்லாதது சில கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பி உள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோருக்கு இந்த ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கு தெளிவான விளக்கத்தை அளிக்கும் வகையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி : பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவரும் காயம் காரணமாகவே இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட முடியாமல் போனதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : கம்பேக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைக்க வரும் விராட் கோலி – புள்ளிவிவரம் இதோ

அதோடு அவர்கள் இருவரும் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெளிவான விளக்கத்தை அளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement