பி.சி.சி.ஐ மற்றும் விராட் கோலி இடையே முற்றிய சண்டை. கேப்டன் பதவியில் நீக்கப்பட்டபோது – நடந்தது என்ன?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்ததை அடுத்து தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விராத் கோலியின் தலைமையின் கீழ் 18 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என்றும் அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்றும் பிசிசிஐ அதிர்ச்சியான ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

Dravid

- Advertisement -

இது விராட் கோலி ரசிகர்களுக்கு மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியது. ஏனெனில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மிக சிறப்பாக கேப்டன்சி செய்திருந்தாலும் அவரை திடீரென கேப்டன் பதவியில் இருந்து தூக்கியதற்கு என்ன காரணம் ? என்று பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் பிசிசிஐ மற்றும் விராட் கோலி ஆகியோர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு தனித்தனி கேப்டன் இருப்பதை பி.சி.சி.ஐ விரும்பவில்லையாம். இதன் காரணமாக ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தானாக முன்வந்து பதவி விலகுமாறு விராட் கோலியை பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

Kohli

ஆனால் கோலி அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் 2023ஆம் ஆண்டு உலக கோப்பை வரை அணியின் கேப்டனாக இருந்து 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுப்பேன் என்று கோலி கூறியுள்ளார். ஆனால் பி.சி.சி.ஐ யின் அதிகாரிகள் எவ்வளவு பேசியும் சமாதானம் ஆகவில்லை. இதனால் இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலி பதவி விலக 48 மணி நேரம் கெடு விதித்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அஜிங்க்யா ரஹானேவுக்கு ஆப்பு வைத்து. ரோஹித் சர்மாவுக்கு பதவி உயர்வு தந்த – பி.சி.சி.ஐ

அந்த 48 மணி நேரத்தில் பதவி விலகவில்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பி.சி.சி.ஐ எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் எடுத்த முடிவிலிருந்து மாறாத கோலி பதவி விலகாததால் அவரை கேப்டன் பதவியிலிருந்து பி.சி.சி.ஐ நீக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 65 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement