அஜிங்க்யா ரஹானேவுக்கு ஆப்பு வைத்து. ரோஹித் சர்மாவுக்கு பதவி உயர்வு தந்த – பி.சி.சி.ஐ

Rahane
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடரினை அடுத்து இந்திய அணியானது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

IND

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி விராட் கோலியின் தலைமையின் கீழ் 18 பேர் கொண்ட இந்திய அணி பிசிசிஐ அறிவித்தது. அதில் சில முக்கிய மாற்றங்கள் இருந்தன.

குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த அனுபவ வீரர் அஜின்க்யா ரகானேவின் தொடர்ச்சியான மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக அவரது டெஸ்ட் துணை கேப்டன் பதவியை இழந்துள்ளார்.

Rahane

அதேவேளையில் டி20 மற்றும் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ரஹானேவின் மோசமான பார்ம் இந்த தொடரிலும் தொடரும் பட்சத்தில் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement