இதுவரை ஆதாரமும் நிரூபனமும் ஆகல, பொய்யான சூதாட்ட குற்றசாட்டு – பிசிசிஐ மீது பாக் அம்பயர் புகார்

Asad Rauf Umpire
- Advertisement -

கிரிக்கெட்டில் தங்களது திறமையால் அற்புதமாக செயல்பட்டு நாட்டுக்காக சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த எத்தனையோ தரமான வீரர்கள் ஒரு கட்டத்தில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி விளையாட்டில் இருந்தே காணாமல் போனது ஏராளமாகும். சில சமயங்களில் வீரர்கள் மட்டுமல்லாது சரியான முடிவை வழங்கவேண்டிய நடுவர்களும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளார்கள். அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பிரபல அம்பயர் அசாத் ரவூப் கடந்த 2000 – 2013 வரை சுமார் 170 சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டு ஐசிசி எலைட் பேனல் பிரிவில் இடம் பிடிக்கும் அளவுக்கு புகழ் பெற்றவராக இருந்தார்.

ஆனால் 2013இல் நடந்த ஐபிஎல் தொடரில் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை தரகர்களிடம் இருந்து பெற்றார் என்ற சூதாட்ட புகாரை சுமத்திய பிசிசிஐ கடந்த 2016இல் இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அதனால் சர்வதேச அளவிலும் நடுவராக பணியாற்ற முடியாத இவர் தற்போது பாகிஸ்தானின் லாகூரில் துணிக்கடை மற்றும் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

பொய்யான குற்றசாட்டு:
இந்நிலையில் தான் குற்றமற்றவர் என்று கூறும் அசாத் ரௌப் வேண்டுமென்றே வேறு முக்கிய புள்ளிகளை மறைப்பதற்காக தன் மீது பொய்யான குற்றங்களை சுமத்தி தனது கிரிக்கெட் வாழ்க்கையை பிசிசிஐ வீணடித்து விட்டதாக தற்போது புகார் தெரிவித்துள்ளார். 2013இல் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை இதுநாள் வரை பிசிசிஐ ஆதார பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இதற்காக பிசிசிஐயிடம் கைகட்டி நிற்க போவதில்லை என்று காட்டத்துடன் பேசியுள்ளார். மேலும் 2013இல் தாமாக முன்வந்து நடுவர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக கூறும் அவர் பிசிசிஐ சுமத்திய சூதாட்ட குற்றச்சாட்டைப் பற்றி இதுவரை ஐசிசி தம்மிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பதிலிருந்தே நியாயம் தனது பக்கம் உள்ளதாக தெரிவிக்கிறார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2013இல் நடந்ததாக கூறும் சம்பவத்துக்கு பின் பிசிசிஐ 3 வருடங்கள் தூங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் 2016இல் ஒரு விசாரணையை தொடங்கினர். அது ஒரு கட்டாய விசாரணையாகும். ஏனெனில் அதில் உண்மை இல்லை. அவர்கள் எனக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் வைக்கவில்லை. மேலும் அசாத்துக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் பொறுப்பில் இல்லை என்று அந்த வழக்கில் கூறிய நீதிபதியின் தீர்ப்பு இன்னும் என்னிடம் உள்ளது”

- Advertisement -

“2013க்கு பின்பு எனது ராஜினாமாவை வழங்குவேன் என்று ஐசிசியிடம் நான் கூறியிருந்தேன். நான் ஐசிசிக்கு தான் பதில் சொல்லவேண்டும், பிசிசிஐக்கு அல்ல. ஒருவேளை இந்தியாவில் என்மீது பிசிசிஐ வழக்கு தொடர விரும்பினால் அது அவர்கள் மீதுதான் தொடர வேண்டும். ஏனென்றால் என்னைப் பொருத்தவரையில் இது சம்பந்தமாக ஐசிசி என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை” என்று பேசினார்.

பழைய வேலை:
ஒரு காலத்தில் உலக கோப்பை போன்ற சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்ட இவர் பிசிசிஐயின் பொய்யான குற்றச்சாட்டுக்களால் இன்று கிரிக்கெட்டில் வாழ்க்கையை இழந்து உள்ளூரில் “லண்டா பஜார் சாப்” எனும் பெயரில் பாத்திரக் கடையும் துணிகடையும் நடத்தும் புகைப்படங்கள் உலக அளவில் வைரலானது. ஆனால் இந்த வேலை செய்வதில் தமக்கு எந்த ஆச்சரியமுமில்லை என்றும் கூறும் அசாத் ரவூப் கிரிக்கெட்டில் விளையாடி நடுவர் ஆவதற்கு முன்பாக ஆரம்ப காலகட்டங்களில் இந்த வேலையை செய்ததாக தெரிவிக்கிறார். எனவே இந்த வேலையை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்கிறேன் என்று தெரிவித்த அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த வேலை ஏற்கனவே நான் செய்த வணிக தொழிலாகும். ஒருவேளை நடுவராக நான் வராமல் போயிருந்தால் இதைத்தான் அந்த காலகட்டங்களில் செய்து கொண்டிருப்பேன். இந்த வேலையுடன் இரும்பு சம்பந்தமான தொழிலையும் பார்த்து வருகிறேன். சொல்லப்போனால் கிரிக்கெட்டில் நடுவராக வருவதற்கு முன்பாகவே இது போன்ற வேலைகளை துவங்கி விட்டேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ : விராட் கோலிக்கு நோ, தனது கனவு முதல் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சேவாக் – யார்யார் பாருங்க

பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி சர்வதேச அளவில் நடுவராக பணியாற்றிய இவர் 48 டெஸ்ட், 98 ஒருநாள், 23 டி20 போட்டிகள் மற்றும் 8 மகளிர் டி20 போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement