இனி அவரு வேணாம்.. விராட் கோலிக்கு கட்டம் கட்டிய பி.சி.சி.ஐ – ரோஹித் சர்மாவுடன் நடைபெற்ற அவசர மீட்டிங்

BCCI
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்த தொடருக்கு பின்னர் தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான மூன்று வகையான இந்திய அணிகளும் அறிவிக்கப்பட்ட வேளையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் நடைபெற்ற மீட்டிங் ஒன்றில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ரோகித் சர்மாவுடன் நடைபெற்ற அந்த மீட்டிங்கில் இளம் வீரர்கள் அணிக்குள் வந்துள்ளதால் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை இனி வழங்க முடியாது என்றும் அவருடைய இடத்தில் இளம் வீரர்களே தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் இதுகுறித்து நீங்களே விராட் கோலியிடம் தெரிவித்து விடுங்கள் என பிசிசிஐ-யின் முக்கிய நிர்வாகிகள் ரோகித் சர்மாவிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

- Advertisement -

அதோடு ஹார்திக் பாண்டியா தற்போது காயத்தினால் அவதிப்பட்டு வருவதால் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வரை டி20 அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு ரோகித் சர்மாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா அணியின் கேப்டனாக விளையாடும் பட்சத்தில் விராட் கோலிக்கு மட்டும் இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவா? பாண்டியாவா? – வித்தியாசமான முறையில் அறிவித்த நிர்வாகம்

தாங்களாக ஒதுக்குவதற்கு முன்னதாக விராட் கோலியே முன்வந்து டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக முக்கிய வீரராக இடம்பிடித்து விளையாடி வரும் விராட் கோலிக்கு இடம் ஒதுக்காமல் இருப்பது சரியானதாக இருக்காது என்றும் அதனை புரிந்து கொண்டு அவரே சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் பிசிசிஐ எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement