மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவா? பாண்டியாவா? – வித்தியாசமான முறையில் அறிவித்த நிர்வாகம்

Rohit-and-Hardik
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக டிரேடிங் முறையிலும் சில வீரர்கள் மாற்றப்பட்டு அடுத்த ஐபிஎல் தொடருக்கான தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலும், வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலையும் அனைத்து அணிகளும் நவம்பர் 26-ஆம் தேதியே வெளியிட்டு இருந்தன.

அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக செயல்பட்ட ஹார்டிக் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி உள்ளதால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பினை ஏற்பார் என்று சில பேச்சுகள் அதிகளவில் நிலவி வந்தன. அதோடு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவா? பாண்டியாவா? என்ற குழப்பமே பலரது மத்தியிலும் இருந்து வந்தது.

ஏனெனில் குஜராத் அணிக்காக அட்டகாசமான கேப்டன்சி செய்த ஹார்டிக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியதால் அவரே அடுத்த கேப்டன் பொறுப்பினை ஏற்பார் என்றும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்றெல்லாம் கூட பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் அடுத்த ஆண்டிற்கான மும்பை அணியின் கேப்டன் யார்? என்பதை அவர்கள் ஒரு குறிப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் : ரோகித் சர்மா டாஸ் போடுவது போன்றும், டிஆர்எஸ் கேட்பது போன்றும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் ரோஹித் சர்மா , விராட் கோலி – தேர்வு செய்யப்படாதது ஏன்?

அதன் காரணமாக அவரே அடுத்த ஐபிஎல் தொடரின் மும்பை அணியின் கேப்டன் என்பது உறுதியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஹார்டிக் பாண்டியாவின் காட்சிகளும் இடம் பெற்றாலும் அவர் அணியை ஊக்குவிப்பது போன்று அதாவது துணைக் கேப்டனாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement