இனிமேல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரரான இவருக்கு வாய்ப்பு கிடையாது – பி.சி.சி.ஐ முடிவு

shami
- Advertisement -

இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடைபெற்று முடிந்த பல டி20 தொடர்களில் ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு சீனியர் வீரர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே தேர்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பந்துவீச்சு துறையில் பும்ரா, புவனேஸ்வர் குமாரை தவிர்த்து பல சீனியர் பவுலர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் பவுலரான முகமது ஷமிக்கு இனி t20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காது என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை தொடருக்கு பின்னர் t20 கிரிக்கெட்டில் இருந்து முகமது ஷமி புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்பது ஊர்ஜிதமாக தெரியவந்துள்ளது. மேலும் எதிர்வரும் டி20 உலக கோப்பையிலும் அவர் இந்திய அணியில் விளையாட வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தரப்பில் உறுதியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் முகமது ஷமிக்கு பதிலாக இனிவரும் டி20 தொடர்களிலும் சரி, t20 கிரிக்கெட்டிலும் சரி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஷமியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே பயன்படுத்த இருப்பதாக பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே எதிர்வரும் டி20 உலக கோப்பையில் அவரது வாய்ப்பு பறிபோக உள்ளது.

Shami-1

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் பிசிசிஐ தரப்பிலிருந்து முகமது ஷமியிடம் அவரது பணிச்சுமை குறித்த பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. அதில் இனிவரும் தொடர்களில் டி20 கிரிக்கெட்டில் உங்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்வு குழுவினரே அவரிடம் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் அவரைப் போன்றே ஷிகார் தவானுக்கும் டி20 கிரிக்கெட்டில் இடம் வழங்கப்படாது என்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே அவரை பரிசீலிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாக்கியுள்ளது. புதுப்பந்தில் மிகச் சிறப்பாக செயல்படும் முகமது ஷமி டெத் ஓவர்களில் பந்து வீச சற்று தருமாறி வருகிறார். அதே வேளையில் அவருக்கு பதிலாக இடம்பெறும் இளம் வீரர்களுக்கு பவர்பிளே ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : தோனி மட்டும் இல்ல. யாரையும் குறை சொல்ல விரும்பல – ஆரம்பகால கேரியர் பற்றி மனம் திறக்கும் டிகே

அந்த வகையில் திறமையான இளம்வீரரை இணைப்பதற்காகவே முகமது ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முகமது ஷமி கடந்த எட்டு ஆண்டுகளில் இதுவரை 17 t20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement