இரண்டு நாட்கள் நடைபெறயிருக்கும் ஐ.பி.எல் மெகா ஆக்சன். இதுதான் தேதி. இதுதான் இடம் – பி.சி.சி.ஐ தகவல்

auction-1
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கு முன்னர் வீரர்களின் மெகா ஏலம் நடைபெற வேண்டியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 8 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள வேளையில் புதிதாக இணைந்திருக்கும் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளும் கிட்டத்தட்ட தங்களது அணிகளில் மெகா ஏலத்திற்கு முன்பாக வாங்கப்போகும் மூன்று வீரர்கள் குறித்த இறுதியான முடிவை எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL
IPL Cup

இந்நிலையில் இந்த தொடருக்கான மெகா ஏலம் நடைபெற்றால் மட்டுமே அனைத்து அணிகளும் தங்கள் அணிகளில் சேர்க்க வேண்டிய வீரர்களை தேர்வு செய்து எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக ஆயுத்தமாக முடியும். இப்படி ஒரு சூழலில் இதுவரை அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் நடைபெறவில்லை.

- Advertisement -

ஏற்கனவே வெளியான ஒரு தகவலின் படி ஜனவரி மாதம் மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிலும் ஒரு சிறிய மாற்றம் நடைபெற்றுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் ஜனவரி மாதம் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

Auction

அதன்படி இந்த மெகா ஏலமானது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று கூறப்பட்ட வேளையில் தற்போது பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் மெகா ஏலம் நடைபெறும் 2 தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலமானது பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் இதில் அனைத்து அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவர் கால்ல ஸ்பிரிங் இருக்குறதுன்னு நினைக்குறேன். ஏன்னா இவர் அவ்ளோ பாஸ்ட் – சச்சின் புகழாரம்

இருப்பினும் இந்த ஏலம் குறித்து பெரும்பாலான அணியின் உரிமையாளர்கள் தற்போது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஏனெனில் வீரர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விளையாட நேரம் எடுக்கும் என்பதினால் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இதே போன்று அணியை கலைத்து மெகா ஏலம் நடத்துவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement