இவர் கால்ல ஸ்பிரிங் இருக்குறதுன்னு நினைக்குறேன். ஏன்னா இவர் அவ்ளோ பாஸ்ட் – சச்சின் புகழாரம்

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீரரை புகழ்கிறார் என்றால் அது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஏனெனில் கிரிக்கெட் குறித்த அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து வைத்திருக்கும் சச்சின் உண்மையிலேயே ஒரு வீரர் திறமையாக செயல்பட்டால் அவருடைய நடவடிக்கைகளை தொடர்ந்து பார்வையிட்டு அதன் பிறகே அந்த வீரர் குறித்த தனது பாராட்டை வெளிப்படுத்துவார். அந்தவகையில் அவர் ஏற்கனவே பாராட்டியிருந்த சில வீரர்கள் தற்போது உச்ச நட்சத்திரமாக மாறி உள்ளனர்.

siraj

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் குறித்து தற்போது தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது மெல்போர்ன் போட்டியில் விளையாடிய சிராஜ் தனது அறிமுக போட்டியில் விளையாடியது போன்றே விளையாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்கு முதிர்ச்சி அடைந்த ஒரு வீரரின் உடல் மொழி எவ்வாறு இருக்குமோ அதே போன்று அவர் நேர்த்தியாக செயல்பட்டார்.

அதுமட்டுமின்றி நான் ஒவ்வொரு முறை அவரின் பந்துவீச்சை பார்க்கும் போதும் புதுப் புது விடயங்களை அவர் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார் என சச்சின் அவரை புகழ்ந்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சிராஜின் பார்ம் தற்போது அசத்தலாக தொடர்ந்து வருகிறது. அவர் கால்களில் ஸ்ப்ரிங் வைத்துள்ளார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஓடிவருவதை பார்க்கும்போது அவ்வாறு தான் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் முழு எனர்ஜியுடன் பந்து வீசுகிறார். ஒரு வேகப்பந்து வீச்சாளர் இப்படி புத்துணர்வோடு தொடர்ச்சியாக பந்து வீசுவது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.

siraj 2

நான் அவரைப் பார்க்கும்போது முதல் ஓவர் வீசுகிறாரா அல்லது கடைசி ஓவர் வீசுகிறாரா என்று தெரியாத அளவிற்கு எப்போதும் ஒரே மாதிரி நல்ல வேகத்துடன் நல்ல புத்துணர்ச்சியுடனும் பந்து வீசி வருகிறார். நிச்சயம் அவர் இன்னும் பல விடயங்களை விரைவாக கற்றுக் கொண்டு இந்திய அணியின் முன்னணி வீரராக வலம் வருவார் என சச்சின் டெண்டுல்கர் சிராஜ் குறித்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த தொடரில் இந்திய பேட்மேன்களை மிரட்டப்போகும் பவுலர் இவர்தான் – வாசிம் ஜாபர் எச்சரிக்கை

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமான சிராஜ் அந்த தொடரில் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளார். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் 33 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement