இந்த தொடரில் இந்திய பேட்மேன்களை மிரட்டப்போகும் பவுலர் இவர்தான் – வாசிம் ஜாபர் எச்சரிக்கை

Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத காரணத்தினால் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது அசுர பலம் வாய்ந்து நிற்கிறது.

ashwin 1

நிச்சயம் இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரரான வாசிம் ஜாபர் இந்தத் தொடரில் இந்திய அணியை மிரட்ட போகும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : தென்ஆப்பிரிக்க அணியில் டீசன்டான பவுலிங் யூனிட் இருக்கிறது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய அணியை சீண்டிப்பார்க்கும் ஒருவராக இந்த தொடரில் ரபாடா திகழ்வார். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவர் இந்த தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடும் வகையில் தனது பந்துவீச்சை வெளிப்படுத்த இருக்கிறார்.

Rabada

இளமையும் வேகமும் கலந்த இவரிடம் இருந்து பந்துகள் சீறிப்பாய இருக்கின்றன. அதை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்று வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இது மட்டும் நடந்தா நாங்க அப்படியே இந்தியாவுக்கு ரிட்டர்ன் ஆயிடுவோம் – தெ.ஆ வாரியத்தை எச்சரித்த பி.சி.சி.ஐ

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியின் பந்துவீச்சும் தற்போது சிறப்பாக உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தற்போது அசத்தலாக பந்து வீசி வருவதால் இரு அணிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement