இது மட்டும் நடந்தா நாங்க அப்படியே இந்தியாவுக்கு ரிட்டர்ன் ஆயிடுவோம் – தெ.ஆ வாரியத்தை எச்சரித்த பி.சி.சி.ஐ

Practice
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்னும் சில தினங்களில் செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி 26-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடருக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து பல்வேறு தடைகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றன.

INDvsRSA

- Advertisement -

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க நாட்டில் பரவி வரும் ஓமைக்கிரான் வைரஸ் காரணமாக வான்வழி போக்குவரத்தில் இருந்த சிக்கல், பின்னர் தொடரின் அட்டவணையில் ஏற்பட்ட மாற்றம் என பல தடைகளைத் தாண்டி தற்போது இந்த தொடரானது துவங்க உள்ள நிலையில் இந்த தொடர் பாதியில் பாதிக்கப்பட்டு இந்திய அணி நாடு திரும்பும் வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பிசிசிஐ மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் இணைந்து துரிதப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 15 ஆயிரத்தை தொட்டுள்ளதன் காரணமாக முதல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் அவர்கள் பின்பற்றும் பயோ பபுள் என அனைத்துமே தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளன.

Pujara

மேலும் விமான நிலையங்களுக்கு வீரர்கள் செல்லாமல் சாலை மார்க்கமாக செல்லவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் பாதியில் தென்னாப்பிரிக்க நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலோ அல்லது வீரர்களுக்கு இடையே தொற்று ஏற்பட்டாலோ இந்திய அணி உடனடியாக இந்த தொடரை பாதியில் நிறுத்தி நாடு திரும்பும் என்று பிசிசிஐ தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க தொடரில் அசத்த காத்திருக்கும் 3 வீரர்கள். சாதிக்கப்போவது யார்? – லிஸ்ட் இதோ

அதற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டுள்ளதால் தொடரின் இடையே வைரஸ் பரவலோ அல்லது வீரர்கள் யாரேனும் தொற்றினால் பாதிக்கப்பட்டாலோ இந்த தொடரானது பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் நடத்தப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement