தென்னாப்பிரிக்க தொடரில் அசத்த காத்திருக்கும் 3 வீரர்கள். சாதிக்கப்போவது யார்? – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 26-ஆம் தேதி துவங்க உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத காரணத்தினால் இம்முறை இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதேவேளையில் இந்திய அணி சார்பாக இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெறுவார்கள் என்று கருதப்பட்ட ரோகித் சர்மா, கில், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் மூன்று இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களிடையே மிகப் பெரும் கவனத்தை ஈர்க்கவுள்ளது. அதன்படி இந்த தொடரில் அசத்த காத்திருக்கும் 3 வீரர்கள் கொண்ட பட்டியல் இதோ :

1) விராட் கோலி : விராட் கோலி எந்த தொடரில் விளையாடினாலும் அவர் மீது ரசிகர்களின் பார்வை அதிகளவில் இருக்கும். 33 வயதான விராத் கோலி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறந்துள்ளதால் இந்த டெஸ்ட் தொடரில் அவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் விளையாடி வரும் இவர் தென்னாப்பிரிக்க மண்ணில் 10 போட்டிகளில் விளையாடிய 558 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.

ashwin 1

2) அஷ்வின் : இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அளவில் அதிக விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்ற அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் இம்முறை அக்சர் மற்றும் ஜடேஜா ஆகியோர் இல்லாததன் காரணமாக அஷ்வினும் இந்த தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rahul-1

3) கே.எல். ராகுல்: இந்த 2021-ஆம் ஆண்டு முழுவதுமே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் கடைசியாக நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 315 ரன்கள் குவித்தார். அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் 626 ரன்கள் குவித்து அசத்திய இவர் இந்த தொடரில் அசத்துவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement