
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது ஐசிசி தொடர்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அடுத்ததாக அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு விட்டது. ஆனால் இன்னும் இந்தியா பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று அந்த தொடரில் பங்கேற்பது சந்தேகமாகவே இருந்து வருகிறது.
ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வரும் இந்திய அணியானது ஐசிசி தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பொதுவான இடங்களில் அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இவ்வேளையில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் அங்கு நடைபெற இருக்கும் என்று உறுதியாகி உள்ள வேளையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்தியா அந்த தொடரில் பங்கேற்க வேண்டுமெனில் இந்திய அணி மோதும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தான் அல்லாமல் வேறு ஏதாவது நாட்டில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று ஐசிசி இடம் கோரிக்கை வைத்து வருகிறது.
ஐசிசி-யும் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது? என்று தெரியாமல் திகைத்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு நிச்சயம் செல்லாது என்று கூறப்படும் வேளையில் ஆசியக் கோப்பை தொடரானது அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் ஆசிய கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்கேற்கும் வேளையில் பாகிஸ்தான் அணி இங்கு வர வேண்டி இருக்கும். இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பது போல் நிச்சயம் பாகிஸ்தானால் இந்தியா வர முடியாது என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்திய கிரிக்கெட் வாரியம் தான் உலகின் பனக்கார கிரிக்கெட் வாரியமாக இருக்கிறது. அதோடு பி.சி.சி.ஐ-யின் மூலம் ஐசிசிக்கு பெரிய அளவில் லாபம் கிடைத்து வருகிறது.
இதையும் படிங்க : தம்பி எனக்கே அல்வாவா? ரூல்ஸ் தெரியாத இளம் வீரருக்கும்.. வர்ணனையாளர்களுக்கும் பாடம் எடுத்த அஸ்வின்
எனவே இந்த தொடரில் பாகிஸ்தான் பங்கேற்றே தீரும் என்று தெரிகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இங்கு வந்து விளையாடியதால் நிச்சயம் ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான் அணி இங்கு வந்து விளையாடும் என்பது உறுதி.