விராட் கோலியை தக்க வைத்து புஜாராவை மட்டும் நீக்கியது ஏன்? ரசிகர்களுக்கு பிசிசிஐ கொடுத்த விளக்கம் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் நட்சத்திர சீனியர் வீரர் புஜாரா கழற்றி விடப்பட்டுள்ளது நியாயமாற்றம் முடிவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் போலவே பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரமாக நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து பெரிய ரன்களை குவிக்கும் ஸ்டைலை கொண்ட அவர் நவீன கிரிகெட்டில் மகத்தான டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வீரராக போற்றப்படுகிறார்.

Pujara 1

- Advertisement -

குறிப்பாக 2019/20 பார்டர்- கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றிய அவர் 2020/21 தொடரிலும் பாறையை போல் அதிக பந்துகளை எதிர்கொண்டு உடம்பில் அடி வாங்கி முக்கிய ரன்களை எடுத்து மீண்டும் வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் சில மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்டார்.

காரணம் என்ன:
ஆனால் மனம் தளராமல் கவுண்ட்டி தொடரில் அபாரமாக செயல்பட்டு ஜூலை மாதம் கம்பேக் கொடுத்த அவர் கடந்த பிப்ரவரியில் வங்கதேச மண்ணில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனையும் படைத்தார். மேலும் 2023 ஐபிஎல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கவுண்டி தொடரில் மீண்டும் விளையாடி நல்ல பார்மில் இருந்த அவர் ஃபைனலில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமாரான ஷாட்டை அடித்து சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

Pujara 1

இங்கு விஷயம் என்னவெனில் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த விராட் கோலி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் மட்டுமே அடித்து அதே ஃபைனலில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். அதே போல ரோகித் சர்மாவும் சுமாராகவே செயல்பட்ட நிலையில் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ளதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் வங்கதேச மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து 2019க்குப்பின் சுமாராகவே செயல்பட்டுள்ள புஜாரா 2023 பார்டர் – கவாஸ்கர் தொடரிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நல்ல ரிதத்தில் பேட்டிங் செய்யாத காரணத்தாலேயே நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மறுபுறம் விராட் கோலி அதே போல் சுமாரான ரன்கள் எடுத்தாலும் ஃபார்ம் அவுட்டாகாமல் நல்ல ரிதத்தில் இருப்பது போன்ற பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் மீண்டும் தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கும் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Cheteswar Pujara.jpeg

“சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஆஸ்திரேலிய தொடரில் தடுமாறிய புஜாரா ஃபைனலில் விளையாடுவதற்கு குறைந்த வாய்ப்புகளே இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் மாற்றம் செய்ய விரும்பாத தேர்வு குழுவினர் ஃபைனலில் அவரை தேர்வு செய்தனர். அந்த நிலையில் ஓவல் மைதானத்தில் 2 இன்னிங்சிலும் சொதப்பியதே அவருடைய தலையெழுத்தை தீர்மானித்தது. குறிப்பாக தற்காலிக தேர்வுக்குழு தலைவர் எஸ்எஸ் தாஸ் அங்கு இருந்தார். அவர் ஃபைனலுக்கு பின் ராகுல் டிராவிட்டுடன் பேசிய பின்பே இந்த முடிவை எடுத்திருக்கலாம்”

- Advertisement -

“மேலும் 2025 ஃபைனலுக்கு முன்பாக நீங்கள் மொத்தமாக எதையும் மாற்ற முடியாது. புஜாரா கடந்த 3 வருடங்களாக பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. அத்துடன் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையேயான வித்தியாசம் என்னவெனில் ரிதமாகும். ஆம் விராட் கோலியும் சுமாராகவே செயல்பட்டார். ஆனால் அவர் எப்போதும் ஃபார்ம் அவுட்டாகவில்லை. மறுபுறம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பின் புஜாரா நல்ல ரிதத்தில் இருக்கிறேன் என்ற தன்னம்பிக்கையை எப்போதும் ஏற்படுத்தவில்லை”

pujara 1

இதையும் படிங்க:TNPL 2023 : அபராஜித் அதிரடியை மிஞ்சி சதமடித்து மாஸ் காட்டிய அருண் கார்த்திக் – நடப்பு சாம்பியனை நெல்லை சாய்த்தது எப்படி?

“மேலும் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்படாதது மற்றொரு பிரச்சனையாகும். அத்துடன் வங்கதேசத்துக்கு எதிரான அந்த 2 இன்னிங்ஸ தவிர்த்து அவர் கடந்த 3 வருடங்களாக அசத்தவில்லை” என்று கூறினார்.

Advertisement