TNPL 2023 : அபராஜித் அதிரடியை மிஞ்சி சதமடித்து மாஸ் காட்டிய அருண் கார்த்திக் – நடப்பு சாம்பியனை நெல்லை சாய்த்தது எப்படி?

- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 24ஆம் தேதி மதியம் 3.15 மணிக்கு சேலத்தில் இருக்கும் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பிரதோஷ் பால் 2 (8) ரன்னில் தடுமாறி கிளீன் போல்டான நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ஜெகதீசனும் அடுத்த சில ஓவர்களில் 15 (14) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அதனால் 35/2 என பவர் பிளே முடிவில் சரிந்த அந்த அணிக்கு அடுத்ததாக அந்த நம்பிக்கை நட்சத்திரம் பாபா அபாரஜித் அதிரடியாக விளையாடிய நிலையில் அவருடன் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த சஞ்சய் யாதவ் 15 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த லோகேஷ் ராஜ் 1 (2) ரன்னில் அவுட்டாகி வந்த வாக்கிலேயே பெவிலியின் திரும்ப நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய அபாரஜித் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

அருண் கார்த்திக் சதம்:
இருப்பினும் எதிர்ப்புறம் வந்த ஹரிஷ் குமார் 20 (17) ரன்களில் அவுட்டாகி தாக்கத்தை ஏற்படுத்த தவறிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த அபராஜித் 4 பவுண்டரி 5 சித்தருடன் 79 (51) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அவுட்டானார். இறுதியில் சசிதேவ் 13* (12) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் சேப்பாக் 159/7 ரன்கள் எடுக்க நெல்லை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக பொய்யாமொழி 3 விக்கெட்டுகளும் லக்சய் ஜெயின் 2 விக்கெட்களும் மோகன் பிரசாத் மற்றும் சந்திப் வாரியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் தாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய நெல்லைக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சுமாராக பந்து வீசிய சேப்பாக் பவுலர்களை வெளுத்து வாங்கிய அருண் கார்த்திக் அதிரடியாக செயல்பட்டார். ஆனால் அவருடன் மறுபுறம் 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட ஸ்ரீ நிரஞ்சன் 24 (27) ரன்களில் அவுட்டாகி சென்றார். அந்த நிலைமையில் வந்த ரித்திக் ஈஸ்வரன் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் அசத்திய அருண் கார்த்திக் அரை சதமடித்து நெல்லையை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

அவருடன் 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த ரித்திக் ஈஸ்வரன் கடைசி வரை நிதானமாகவே விளையாடி 26 (22) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் சேப்பாக்கம் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அருண் கார்த்திக் நன்கு செட்டிலாகி நேரம் செல்ல சில அதிரடியை அதிகப்படுத்தி பவுண்டரிடன் சதமடித்து நெல்லையை வெற்றி பெற வைத்தார். அவரது அதிரடியால் 18.5 ஓவரிலேயே 160/2 ரன்கள் எடுத்த நெல்லை நடப்பு சாம்பியனாக திகழும் வலுவான சேப்பாக்கத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

அதன் காரணமாக பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட சேப்பாக்கம் சார்பில் அதிகபட்சமாக ராக்கி பாஸ்கர் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி கடைசி வரை அவுட்டாகாமல் 10 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 104* (61) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அருண் கார்த்திக் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க:இனிமே நீங்க எல்லாம் ஆடுறதே வேஸ்ட். இந்திய அணியின் தேர்வுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்திய – தமிழக வீரர் அபினவ் முகுந்த்

மேலும் பங்கேற்ற 5 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த நெல்லை 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மறுபுறம் 5 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்த நடப்பு சாம்பியன் சேப்பாக்கம் 4 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.

Advertisement