இனிமே நீங்க எல்லாம் ஆடுறதே வேஸ்ட். இந்திய அணியின் தேர்வுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்திய – தமிழக வீரர் அபினவ் முகுந்த்

Abhinav-Mukund
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்தது. அதில் டெஸ்ட் தொடருக்கான அணியில் ரோகித் சர்மா தலைமையின் கீழ் 16 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அந்த அணியில் அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதோடு அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனை தவிர்த்து முகேஷ் குமார், ஜெயதேவ் உனட்கட், நவ்தீப் சைனி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே வேளையில் முகமது ஷமிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ரஞ்சி கோப்பை போன்ற உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடிய எந்த ஒரு வீரருக்கும் இடம் அளிக்காமல் போனது பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்கள் இந்திய அணியின் அழைப்புக்காக நீண்டகாலமாக காத்திருக்கும் வேளையில் ஐபிஎல் போட்டிகளை வைத்து மட்டுமே இந்திய அணியின் தேர்வு நடைபெறுவதாக முன்னாள் வீரர்கள் பலரும் சாடி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும், தமிழக வீரருமான அபினவ் முகுந்த் இந்திய அணியின் இந்த தேர்வை விமர்சித்து தனது அதிருப்தியை டிவிட்டரின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டதாவது :

இதையும் படிங்க : வீடியோ : திமிரான ராபின்சனுக்கு 2021லயே ஸ்லெட்ஜிங் செய்து ஓடவிட்ட கிங் கோலி மாதிரி பதிலடி கொடுங்க – ஆஸிக்கு ரசிகர்கள் அட்வைஸ்

இந்திய டெஸ்ட் அணியின் வீரர்களை தேர்வு செய்துள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இனிமேல் இளம் வீரர்கள் தங்களது மாநில அணிக்காக விளையாடுவதால் பெருமை கொள்வதற்கோ, மகிழ்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை. ஏனெனில் இந்திய அணியில் விரைவாக இடம் பிடிக்க வேண்டுமெனில் பிரான்சைஸி கிரிக்கெட் தான் புதிய வழியாக மாறி உள்ளது என அவர் தனது அதிப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

Advertisement