திமிரான ராபின்சனுக்கு 2021லயே ஸ்லெட்ஜிங் செய்து ஓடவிட்ட கிங் கோலி மாதிரி பதிலடி கொடுங்க – ஆஸிக்கு ரசிகர்கள் அட்வைஸ்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்றுப் பழமை வாய்ந்த 2023 ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தன்னை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. அந்தத் போட்டியில் தைரியமாக டிக்ளர் செய்து கையில் வைத்திருந்த வெற்றியை இங்கிலாந்து கோட்டை விட்டது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அதை விட இங்கிலாந்து வீரர் ஓலி ராபின்சன் 141 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்த கவாஜாவை அவுட்டாக்கிய போது மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக 62 போட்டிகளில் விளையாடி 13 சதங்கள் அடித்து அந்த போட்டியிலும் இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த கவாஜா போன்ற சீனியர் வீரரை வெறும் 17 போட்டிகளில் விளையாடி பெரிய அளவில் வளராமல் இருக்கும் ராபின்சன் மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்டது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பதிலடி கொடுத்த நிலையில் வெறும் 124 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய நீங்கள் எல்லாம் ஒரு பவுலரே கிடையாது என மேத்யூ ஹெய்டன் சரமாரியாக விமர்சித்தார்.

- Advertisement -

கிங் கோலியின் பதிலடி:
மொத்தத்தில் இது போல எதிரணிகளை தெறிக்க விடும் ஆஸ்திரேலியர்களையே இப்போட்டியில் ராபின்சன் சீண்டிப் பார்த்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. முன்னதாக கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பாகவே 2012ஆம் ஆண்டு இந்தியா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் பற்றி இனவெறி மற்றும் பாலியல் சம்பந்தமாக மோசமான வார்த்தைகளால் ராபின்சன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை 2021ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக அறிமுகமான போது தோண்டி எடுத்த ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்ததால் அடுத்த போட்டியிலேயே அவருக்கு இங்கிலாந்து வாரியம் அதிரடியான தடை விதித்தது.

அதனால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஓலி ராபின்சன் அபராதத்தை செலுத்திய பின்பே மீண்டும் அதே வருடம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வானார். அந்த தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 2வது இன்னிங்ஸில் முக்கிய தருணத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்த முகமது சிராஜ் ஹாட்ரிக் விக்கெட்களை எடுப்பதற்கான பந்தை எதிர்கொள்ள ஓலி ராபின்சன் வந்தார்.

- Advertisement -

அப்போது “உங்களுடைய இன்னிங்ஸ் ரொம்பவே அலுப்பு தட்டுகிறது. ஒருவேளை இப்படி கட்டையை போடும் ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் இந்த டெஸ்ட் போட்டியில் நீங்கள் தோல்வியை தவிர்க்க முயற்சிக்கிறீர்களா. கம் ஆன் பெரிய வாய் (ராபின்சன்) உங்களுடைய தாள்களை கொண்டு வரவா” என இந்திய கேப்டன் பிராட் கோலி தாமாக சென்று ஸ்லெட்ஜிங் செய்து வம்பிழுத்தார். அப்படி கேப்டன் ஸ்லெட்ஜிங் செய்ததால் உத்வேகமடைந்த சிராஜ் பவுன்சர் பந்தை வீசினார்.

அதை ராபின்சன் தடுத்தாலும் அவருடைய அருகே சென்ற சிராஜ் வெறித்தனமாக முறைத்துப் பார்த்தார். அதே சமயத்தில் எஞ்சிய 4 – 5 இந்திய வீரர்கள் ராபின்சனை சுற்றி கைதட்டி ஸ்லெட்ஜிங் செய்து பயத்தை காட்டினர். அப்படி விராட் கோலி தலைமையில் மொத்த அணியினரும் மிரட்டியதால் கொஞ்ச நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாத ராபின்சன் அடுத்த சில ஓவர்களில் அவுட்டாக அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்த இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த வகையில் திமிரான ராபின்சனுக்கு அவரது போக்கிலேயே மாஸ் பதிலடி கொடுத்து ஓடவிட்ட விராட் கோலியின் பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:2023 உலக கோப்பையிலும் தோற்கணுமா? இளம் படை உருவாக்கும் சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்க – தேர்வுக்குழுவை விமர்சித்த கவாஸ்கர்

குறிப்பாக ராபின்சன் போன்றவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் இதே போல லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்ததாக நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் ஸ்லெட்ஜிங் செய்து பதிலடி கொடுங்கள் என இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியர்களுக்கு இந்த வீடியோவை காட்டி ஆலோசனை தெரிவிக்கின்றனர். அதே சமயம் இப்படி எதிரணிகளை தெறிக்க விடும் அளவுக்கு அபாரமாக கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி தற்போது அந்தப் பதவியில் இல்லை என்பதும் இந்திய ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்துகிறது.

Advertisement