அப்போ பும்ரா நேராக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் அதானே? ரசிகர்களின் கேள்விக்கு சேட்டன் சர்மா கூறும் பதில் என்ன?

Jasprith Bumrah vs KKR
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்தாலும் தென்னாபிரிக்கவுக்கு எதிரான 3வது போட்டியில் தோற்று ஹாட்ரிக் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் அரையிறுதிக்கு செல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

Bumrah

- Advertisement -

ஏனெனில் சமீப காலங்களில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால் சமீபத்திய ஆசிய கோப்பை போன்ற முக்கிய வெற்றிகளை கோட்டை விட்ட இந்தியாவின் பிரச்சனையை சரி செய்வார் என்று ரசிகர்கள் நம்பிய ஜஸ்ப்ரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது ஏமாற்றத்தை கொடுத்தது. முன்னதாக இப்படி ஒரு நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகவே கடந்த ஒரு வருடமாக இந்தியா பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து போன்ற முக்கியமற்ற டி20 தொடர்களில் பணிச்சுமையை நிர்ணயிக்கும் வண்ணம் ஓய்வெடுத்த பும்ரா சமீபத்திய ஆசிய கோப்பைக்கு முன்பாக காயமடைந்து வெளியேறினார்.

நேராக ஐபிஎல் தானா:
அதிலிருந்து குணமடைந்து ஒரு சில போட்டிகளில் விளையாடிய அவர் மீண்டும் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியதால் கோபமடைந்த ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவார் என்று கடுமையாக விமர்சித்தார்கள். ஏனெனில் 2019க்குப்பின் ஐபிஎல் தொடரில் மும்பை பங்கேற்ற 60 போட்டிகளில் 59இல் பங்கேற்ற அவர் அதே காலகட்டத்தில் இந்தியா பங்கேற்ற 70 டி20 போட்டிகளில் 20 போட்டிகளில் கூட விளையாடவில்லை.

MI Jaspirt Bumrah

மேலும் அவரது காயம் குணமடைய 6 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியானதால் அடுத்ததாக 2023 ஐபிஎல் தொடரில் மும்பைக்காக விளையாடுவார் என்றும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். அந்த நிலையில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைக்கு பின் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக பங்கேற்கும் 4 கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் 4 வகையான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் எந்த அணியிலுமே ஜஸ்பிரிட் பும்ரா இடம் பெறாததால் அதிருப்தியடைந்துள்ள ரசிகர்கள் “அப்படியானால் நாங்கள் சொல்வது போல் நேராக 2023 ஐபிஎல் தொடரில் விளையாட வருவாரா?” என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் டி20 உலக கோப்பையில் பங்கேற்க தயாராக வேண்டும் என்பதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க தொடர்களில் ஜஸ்பிரித் பும்ராவை அவசரப்படுத்தியதாக தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்துள்ளார். அதனாலேயே அவர் காயமடைந்து கடைசி நேரத்தில் வெளியேறியதாக கூறும் சேட்டன் சர்மா ஏற்கனவே செய்த அதே தவறை மீண்டும் செய்ய விரும்பவில்லை என்றும் முழுமையாக குணமடையும் வரை காத்திருப்பதாகவும் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

Chetan-1

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டியுள்ளது. முன்னதாக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக நாங்கள் அவரை அவசரப்படுத்தினோம். ஆனால் இறுதியில் என்னவாயிற்று என்று உங்களுக்கே தெரியும். அதனால் நாம் தற்போது ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் உலகக்கோப்பையில் விளையாடி வருகிறோம். எனவே தற்போது அவரை தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் மருத்துவ குழுவினர் சோதித்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதனால் விரைவில் அவர் இந்திய அணியில் இணைவார்”.

இதையும் படிங்க : டி20 உ.கோப்பையுடன் ஓரங்கட்டப் படுகிறார்களா டிகே, அஷ்வின்? – பிசிசிஐ போடும் ஸ்கெட்ச் இதோ

“இருப்பினும் வங்கதேச தொடருக்காக அவரை அவசரப் படுத்தி மீண்டும் ஒரு ஆபத்தான முடிவை நாங்கள் எடுக்க விரும்பவில்லை. மேலும் வீரர்களுக்கு ஓய்வளிப்பது பற்றி ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அணி மற்றும் கேப்டன்களை மாற்றுவதில் எந்த தேர்வு குழு உறுப்பினரும் முடிவெடுப்பதில்லை. மாறாக இங்கே நிறைய போட்டிகள் நடைபெறுவதால் நமது வீரர்களின் பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. எனவே தேசிய அகடமியுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஜஸ்ப்ரித் பும்ரா விரைவில் இந்திய அணியில் இணைவார்” என்று கூறினார்.

Advertisement