டி20 உ.கோப்பையுடன் ஓரங்கட்டப் படுகிறார்களா டிகே, அஷ்வின்? – பிசிசிஐ போடும் ஸ்கெட்ச் இதோ

Dinesh Karthik Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், நெதர்லாந்தை தோற்கடித்தாலும் 3வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்து ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் அரை இறுதிக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியா அடுத்ததாக நவம்பர் 2ஆம் தேதியன்று வங்கதேசத்தை 4வது போட்டியில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இந்த டி20 உலக கோப்பையை முடித்துக் கொண்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது.

IND vs RSA MIller Rahul Rohit Suryakumar

- Advertisement -

அதன்பின் வங்கதேசத்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா பங்கேற்கிறது. இந்த அனைத்து தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓய்வெடுக்கும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் வங்கதேச சுற்றுப் பயணத்திற்கு திரும்புகின்றனர். அதனால் நியூசிலாந்தில் நடைபெறும் டி20 தொடரின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் ஒருநாள் தொடரின் கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தலைமையில் சுப்மன் கில், உம்ரான் மாலிக், குல்தீப் சென், சபாஷ் அகமது போன்ற இளம் வீரர்களுக்கு அந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வாய்ப்பளிக்கப்பட்டது.

முடிகிறதா கேரியர்:
இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய டி20 அணிகளில் தமிழகத்தின் சார்பில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள வாஷிங்டன் சுந்தர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் கழற்றி விடப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு காலத்தில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக இருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் 2017 சாம்பியன்ஸ் டிராபில் ஒரு சில போட்டிகளில் சுமாராக செயல்பட்டதால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று அப்போதைய கேப்டன் விராட் கோலி மொத்தமாக கழற்றி விட்டார்.

Ravichandran Ashwin

ஆனாலும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் விளையாடிய அவருக்கு 2020, 2021 வாக்கில் சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் பார்மை இழந்ததால் 4 வருடங்கள் கழித்து துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை விளையாடும் வாய்ப்பு நேரடியாக தேடி வந்தது. அப்போது முதல் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டதால் இந்த உலகக் கோப்பையிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள அஷ்வின் பேட்டிங்கிலும் முன்பை விட நல்ல முன்னேற்றத்தை கண்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மறுபுறம் கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடி கடந்த வருடம் வர்ணனையாளராக அவதரித்ததால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2022 தொடரில் கடுமையாக உழைத்து 3 வருடங்கள் கழித்து யாருமே எதிர்பாராத வகையில் போராடிக் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

புதிய ஸ்கெட்ச்:
அதில் இருதரப்பு தொடர்களில் அசத்திய அவர் இந்த அழுத்தமான உலகக்கோப்பை சுமாராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் 37 வயதை கடந்து விட்டதாலும் ரவிச்சந்திரன் அஷ்வின் 36 வயதை தாண்டி விட்டதாலும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இவர்களை ஓரம் கட்ட பிசிசிஐ முடிவெடுத்துள்ள காரணத்தாலேயே இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர்கள் கழற்றி விடப்பட்டதாக தெரிய வருகிறது. அதிலும் குறிப்பாக அடுத்ததாக வரும் 2024இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அடுத்த தலைமுறை இளம் இந்திய அணியை கட்டமைப்பதற்காக இந்த சீனியர்களுக்கு டாட்டா காட்டும் பிசிசிஐ இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது.

Dinesh-Karthik

இதனால் இந்திய டி20 கிரிக்கெட்டில் இந்த 2 தமிழக வீரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்படுகிறது. இதில் 36 வயதாகும் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்மை வீரராக இருப்பதால் வரும் காலங்களில் டி20 கிரிக்கெட்டிலும் எதிர்பாராத வகையில் தேர்வாக கணிசமான வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : எங்க கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றிங்களே – உ.கோ’யிலிருந்து முதல் அணியை வெளியேற்றி கெத்து காட்டிய இலங்கை

ஆனால் 37 வயதை கடந்து டி20 உலக கோப்பை எனும் முக்கிய இடத்தில் கிடைத்த வாய்ப்புகளில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்கை இந்திய ஜெர்சியில் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும் என்பது தமிழக ரசிகர்கள் ரணத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிதர்சனமாகும்.

Advertisement