எங்க கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றிங்களே – உ.கோ’யிலிருந்து முதல் அணியை வெளியேற்றி கெத்து காட்டிய இலங்கை

SL vs AFG dasun Shanaka De Silva
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதில் நம்பவம் 1ஆம் தேதியன்று நடைபெற்ற 32வது லீக் போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. புகழ்பெற்ற பிரிஸ்பேன் காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் 20 ஓவர்களில் போராடி 144/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு 42 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 28 (24) ரன்கள் எடுத்தார்.

ஆனால் உஸ்மான் காணி 27 (27) இப்ராஹிம் ஜாட்ரான் 22 (18) என இதர முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றினர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக வணிந்து ஹசரங்கா 3 விட்டுகளையும் லகிரு குமாரா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 145 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 10 (10) குசால் மெண்டிஸ் 25 (27) என தொடக்க வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றினாலும் 3வது இடத்தில் களமிறங்கிய தனஞ்செயா டி சில்வா அதிரடியாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

கேரக்டரை புரிஞ்சிக்கோங்க:
இருப்பினும் அவருக்கு கை கொடுக்க வேண்டிய சரித் அசலங்கா 19 (18) ரன்களிலும் பனுக்கா ராஜபக்சா 18 (14) ரன்களிலும் அவுட்டாகி சென்றார்கள். ஆனால் மறுபுறம் தில்லாக பேட்டிங் செய்த டீ சில்வா 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 66* (42) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். அதனால் 18.3 ஓவரிலேயே 148/4 ரன்கள் எடுத்த இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து குரூப் 1 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தது.

மறுபுறம் மழையால் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை கூட பெறாத ஆப்கானிஸ்தான் அடுத்த 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. அதனால் தனது கடைசி போட்டியில் வென்றாலும் அரை இறுதிக்கு செல்ல முடியாத வாய்ப்பை இழந்ததால் இந்த உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றிலிருந்து முதல் அணியாக ஆப்கானிஸ்தான் பரிதாபமாக வெளியேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

- Advertisement -

அதே சமயம் சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்து யாருமே எதிர்பாராத வகையில் இளம் வீரர்களுடன் ஆசிய சாம்பியனாக சாதனை படைத்த இலங்கை இந்த உலகக் கோப்பையில் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அதனால் அனைவரும் கிண்டலடித்த அந்த அணி அதன் பின் ஆசிய கோப்பை போலவே மீண்டெழுந்து சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற அசத்தியது. இருப்பினும் சூப்பர் 12 சுற்றில் 2 தோல்விகளை சந்தித்ததால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை தற்போது ஆப்கானிஸ்தானை முதல் அணியாக வெளியேற்றியுள்ளது.

அத்துடன் தற்போது 3வது இடத்தில் இருக்கும் அந்த அணி தன்னுடைய கடைசி போட்டியில் வெல்வதுடன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அதனுடைய கடைசி போட்டியில் தோற்றால் அரை இறுதிக்கு செல்லலாம் என்று அதிர்ஷ்டத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இதையும் படிங்க : உங்களுக்கு என்ன பிரச்சனை? சொதப்பிய டிகே’வை திட்டாத குறையாக விமர்சித்து கம்பீர் பேசியது என்ன

அதன் காரணமாக ஆசிய கோப்பையை போலவே இந்த தொடரிலும் தங்களது அணி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தும் என்று இலங்கை ரசிகர்கள் மீண்டும் உறுதியாக நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement