இந்திய வீரரை சஹாவை மிரட்டிய பத்திரிக்கையாளருக்கு பி.சி.சி.ஐ கொடுத்த தண்டனை – என்ன தெரியுமா?

Saha
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹா கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் இந்த ஆண்டு குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். தோனி இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்ததால் 2010-ஆம் ஆண்டு அறிமுகமாகியிருந்தாலும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் சஹா தவித்து வந்தார்.

Saha

- Advertisement -

அதனை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் கீப்பராக மாறிய சஹா இதுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோன்று 9 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் தற்போது 37 வயதை எட்டியுள்ள அவர் வயது மூப்பின் காரணமாக அணியில் இடம்பெறாமல் உள்ளார்.

அதேவேளையில் ரிஷப் பண்டும் சிறப்பாக விளையாடி வருவதால் அவரே இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என பிசிசிஐ வீரர்களின் அட்டவணையை வெளியிட்டு அவரின் வெளியேற்றத்தை உறுதி செய்தது.

Boria Majumdar Wriddhiman Saha

அதன் பிறகு அவரை பத்திரிக்கையாளர் போரியா குறுஞ்செய்தி மூலம் கேலி செய்து அவரை மிரட்டியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டினை சஹா முன்வைத்திருந்தார். மேலும் அவர் வாட்ஸ்அப் மூலம் தன்னைத் தொடர்பு கொண்டு குறுஞ்செய்திகளை தொடர்ச்சியாக அனுப்பி தன்னை விமர்சித்தும் மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதோடு இதுகுறித்த முழு விவரத்தையும் பி.சி.சி.ஐ-யிடம் தெரிவித்து விட்டதாக கூறியிருந்தார். அதன் பின்னர் பி.சி.சி.ஐ-யும் இது குறித்து விசாரணை நடத்தியது. அப்போது அந்த பத்திரிகையாளர் குறித்து தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறி ஒரு முடிவினை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : கடந்த சில போட்டிகளாகவே அணியில் இடம்பெறாத சி.எஸ்.கே இளம்வீரர் – அவரை ஏன் சேக்கல (ரசிகர்கள் கேள்வி)

இந்நிலையில் அந்த பத்திரிக்கையாளர் போரியாவை விசாரித்த பிசிசிஐ தற்போது அவருக்கு தண்டனையும் வழங்கி உள்ளது. தீவிர விசாரணைக்குப் பிறகு போரியாவிற்கு இரண்டு ஆண்டுகள் பத்திரிக்கையாளராக வீரர்களிடம் சந்திப்போ அல்லது நேர்காணலோ எதுவும் நடத்தக்கூடாது என்றும் அவர் எந்தவித கூட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement