
இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 24 டெஸ்ட் போட்டிகள், 1 ஒருநாள் போட்டி மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணிகள் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும் பார்க்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இரண்டு சதங்களுடன் 411 குவித்து இந்திய அணிக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு ஆசிய கோப்பை டி20 அணியிலும் இடம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. ஏற்கனவே இந்திய டி20 அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அவர் 22 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 5 அரைசதம் என 723 ரன்களை குவித்துள்ள வேளையில் அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் தற்போதுள்ள இந்திய டி20 அணியில் டாப் ஆர்டர் வீரர்களை மாற்ற நிர்வாகம் விரும்பவில்லை. அதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலும் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரே துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று தெரிகிறது. மேலும் பேக்கப் வீரர்களாக பல்வேறு வீரர்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.
அதனால் தற்போதைக்கு இந்திய டி20 அணியில் ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை என தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணிலும் சரி, எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிலும் சரி பெரியளவில் மாற்றங்கள் இருக்காது என்பதனால் ஜெய்ஸ்வாலை டி20 கிரிக்கெட்டில் இருந்து சற்று தள்ளி இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் கவனத்தை செலுத்தவும் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய டி20 அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்பதனால் ரெட் பால் கிரிக்கெட்டில் அதிக பயிற்சி செய்து கவனத்தை செலுத்துமாறு ஜெய்ஸ்வாலிடம் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : 2015இல் சாதாரண பவுலரான பும்ராவை அவரிடம் ரெக்கமெண்ட் பண்ணேன்.. ஆஸியில் லக் அடிச்சுது.. இஷாந்த் பேட்டி
இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக மிகச்சிறப்பாக விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய மண்ணிலும் சரி, வெளிநாட்டு மண்ணிலும் சரி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் அவர்மீது இந்திய அணியின் நிர்வாகம் நிறைய நம்பிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.