2015இல் சாதாரண பவுலரான பும்ராவை அவரிடம் ரெக்கமெண்ட் பண்ணேன்.. ஆஸியில் லக் அடிச்சுது.. இஷாந்த் பேட்டி

Ishant Sharma
- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். குறைந்த தூரம் ஓடி வந்த அவர் வித்தியாசமான ஆக்சனை வைத்து பவுலிங் செய்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த தனித்துவமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கத் துவங்கிய பும்ரா இன்று உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக இந்த ஆக்சனை வைத்துக்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற பலரும் அவரை சந்தேகித்தனர். ஆனால் 2018ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா இன்று ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். அந்தளவுக்கு திறமையால் முன்னேறியுள்ள பும்ரா இந்தியாவுக்காக அறிமுகமான பின்னணியை இசாந்த் சர்மா பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

2015இல் சாதாரண பும்ரா:

2015ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் போட்டியில் முதல் முறையாக பும்ராவை பார்த்ததாக இஷாந்த் கூறியுள்ளார். அப்போது மற்ற அனைத்து பவுலர்களைப் போல் பும்ராவும் நீண்ட தூரம் ஓடிவந்து வழக்கமான ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நாளடைவில் தம்முடைய ஆக்சனை மாற்றிய அவரை இந்திய அணியில் விளையாட வைக்குமாறு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பரிந்துரைத்ததாகவும் இசாந்த் சர்மா கூறியுள்ளார்.

ஆச்சரியப்படும் வகையில் பும்ரா அணியில் தேர்வு செய்யப்பட்டதும் முக்கிய வீரர் காயமடைந்ததாக அவர் கூறியுள்ளார். அதனால் உடனடியாக பும்ராவுக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்ததாக தெரிவிக்கும் இஷாந்த் சர்மா இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் 2015இல் ஒரு லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது”

- Advertisement -

இன்று நமபர் ஒன்:

“நாங்கள் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு இறுதிப்போட்டியில் டெல்லி – குஜராத் அணிக்காக விளையாடினோம். அந்த சமயத்தில் பும்ரா சாதாரண வேகப்பந்து வீச்சாளரின் ரன்-அப்பை வைத்திருந்தார். இப்போது போல குறைந்த தூரம் ஓடிவந்து பந்து வீசும் ஆக்சனை அவர் அப்போது கொண்டிருக்கவில்லை. அந்தப் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்”

இதையும் படிங்க: உண்மையை சொல்லி அவரை விமர்சித்ததால் ஐபிஎல் கமெண்ட்ரில இருந்து என்னை தூக்குனாங்க.. இர்பான் பதான்

“அதன் பின் நாங்கள் (2016இல்) ஆஸ்திரேலியாவுக்கு சென்றோம். அப்போது இந்த “இந்திய அணிக்கு யாராவது தேவைப்பட்டால் அது ஜஸ்ப்ரித் பும்ரா தான்” என்று ரவி சாஸ்திரி பாயிடம் சொன்னேன். அப்போது ரவி பாய் அணியின் ஆலோசகராக இருந்தார். அவருடைய (பும்ரா) அதிர்ஷ்டத்தைப் பாருங்கள். மற்றொரு வீரர் காயமடைந்ததால் பும்ரா அணிக்குள் வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை அவருடைய மனநிலைமையும் தன்னம்பிக்கையும் அவரை தனித்து நிற்க வைக்கிறது” என்று கூறினார்

Advertisement