நீங்க மட்டும் பெரிய கொம்பா? ஹர்டிக் பாண்டியாவுக்கும் பிசிசிஐ வைத்துள்ள செக்.. வெளியான தகவல்

Hardik Pandya BCCI
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அந்த பட்டியலில் இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தியும் அதைக் கேட்காததால் அவர்கள் மீது பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும் இதில் ரஞ்சிக் கோப்பையை வேண்டுமென்றே புறக்கணித்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தயாராகி வரும் இசான் கிசானை நீக்கியதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் 2023 உலகக் கோப்பையில் 530 ரன்கள் குவித்து 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2வது போட்டியில் காயமடைந்து வெளியேறினார்.

- Advertisement -

பாண்டியாவுக்கு செக்:
எனவே முழுமையாக குணமடைந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குள் அவர் மீது இப்படி ஒரு நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஒரு வருடமாக எந்த உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வரும் ஹர்திக் பாண்டியாவை மட்டும் ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்துள்ளது நியாயமா? என்றும் பிசிசிஐ மீது ரசிகர்களும் இர்ஃபான் பதான் போன்ற முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக தன்னுடைய உடல் ஒத்துழைக்காது என்பதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று ஏற்கனவே பிசிசிஐயிடம் வெளிப்படையாக சொல்லி ஹர்திக் பாண்டியா ஸ்பெஷல் அனுமதியை வாங்கியுள்ளார். அதன் காரணமாகவே ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத போதிலும் அவர் தற்போது மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியாவுக்காக தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமெனில் ஹர்திக் பாண்டியா அதற்கு தகுந்த உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கெடு விதித்துள்ளது.

- Advertisement -

இல்லையெனில் ஸ்ரேயாஸ், இஷான் கிசான் போலவே பாண்டியாவும் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளார். இது பற்றி அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஹர்திக் பாண்டியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் உள்ளூர் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுமாறு அவரிடம் கூறியுள்ளோம்”

இதையும் படிங்க: ராஞ்சி டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ரவீந்திர ஜடேஜா செய்த செயல் – இவரும் எவ்ளோ பெரிய ரசிகரா இருக்காரு பாருங்க

“தற்போதைய நிலைமையில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவரால் ரஞ்சிக் கோப்பை போன்ற டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடாத நேரத்தில் அவர் உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும். ஒருவேளை அவர் அதில் விளையாடாமல் போனால் ஒப்பந்தத்தை தவற விடுவார்” என்று கூறியுள்ளார். மொத்தத்தில் நீங்க மட்டும் என்ன பெரிய கொம்பா என்ற வகையில் பாண்டியா பக்கமும் பிசிசிஐ திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement