ராஞ்சி டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ரவீந்திர ஜடேஜா செய்த செயல் – இவரும் எவ்ளோ பெரிய ரசிகரா இருக்காரு பாருங்க

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது அண்மையில் ராஞ்சி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 192 ரன்கள் என்கிற இலக்கினை ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றிகரமாக துரத்தி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரையும் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் ராஞ்சி நகரில் நடைபெற்ற இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அங்கு இருக்கும் தோனியின் வீட்டிற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரரும், சிஎஸ்கே அணியின் அனுபவ வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தோனியுடன் நீண்ட காலம் பயணித்துள்ள ஜடேஜா, சிஎஸ்கே அணியில் அவருக்கு அடுத்து முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். அதோடு தோனி மற்றும் ஜடேஜா ஆகியோரது நட்பு மிக நீண்ட ஆண்டு காலமாக தொடரும் வேளையில் தற்போது தோனியின் வீட்டிற்கு சென்றிருந்த ஜடேஜா அவரது வீட்டின் முன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வருகிறது.

- Advertisement -

இந்தியாவிலுள்ள பல்வேறு ரசிகர்களும் தோனியை காண ஆவலுடன் அவரது வீட்டின் முன் காத்திருக்கும் வேளையில் ரசிகர்கள் அவரது வீட்டின் முன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை போன்று தோனியின் வீட்டின் கதவு முன் எடுத்துக்கொண்ட ரவீந்திர ஜடேஜாவின் புகைப்படமும் தற்போது இணையத்தின் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல்க்கு நிகராக ரஞ்சிக் கோப்பை வீரர்களுக்கு 3 மடங்கு சம்பளம்.. பிசிசிஐ கையிலெடுக்கும் புதிய திட்டம்

தோனியை காண ரசிகர்கள் பலரும் காத்திருக்கும் வேளையில் தானும் ஒரு ரசிகனாக அவரது வீட்டின் முன் ஜடேஜா எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதன்மூலம் அவரும் தோனியின் மிகப்பெரிய ரசிகர் என்பது நிரூபணமாகியுள்ளது.

Advertisement