உலககோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து கேள்வி எழுப்பிய பி.சி.சி.ஐ – டிராவிட் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Dravid
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு சென்றது. அதன் காரணமாக இந்திய அணியே இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற பேச்சுக்கள் இருந்தது.

ஆனால் நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற முக்கியமான இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி மீண்டும் ஒரு முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பினை இழந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியவரிடம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கேள்வி எழுப்பி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அந்த கேள்விக்கு பதில் அளித்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : அகமதாபாத் மைதானம் இரண்டாம் பாதியில் நாங்கள் நினைத்த அளவு திரும்பவில்லை. அதோடு அந்த இறுதிப்போட்டியில் நமது அணி 240 ரன்களை மட்டுமே அடித்ததும் தோல்விக்கு காரணமாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததாலே சரிவை சந்தித்ததாகவும் அதன் காரணமாகவே இந்த தோல்வி நடந்ததாகவும் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டிகள் எப்போது துவங்குகிறது? எந்த சேனலில் பாக்கலாம் – விவரம் இதோ

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சென்று 3 விதமான தொடர்களிலும் பங்கேற்று விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement