ஆசியக்கோப்பை : இந்திய அணி வீரர்களுக்கு ஸ்பெஷலான பல ஏற்பாடுகளை செய்துள்ள பி.சி.சி.ஐ – அடேங்கப்பா

IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆகஸ்ட் 27-ஆம் தேதி 15-வது ஆசிய கோப்பை தொடரானது துவங்க உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாட உள்ளதால் இந்த கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான ஆறு அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து பயிற்சிகளை முடித்த வேளையில் இன்று முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.

Asia Cup

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் மட்டுமே நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் பயணித்துள்ள அனைத்து அணி வீரர்களுக்கும் சரியான ஹோட்டல் ஏற்பாடு மற்றும் பயண வசதி ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகமான ஐசிசி செய்து தந்துள்ளது. அதன்படி இந்திய அணியை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்துமே “பிசினஸ் பே” என்கிற ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மற்ற ஐந்து அணிகளை தவிர்த்து இந்திய அணிக்கு மட்டும் பிசிசிஐ ஏகப்பட்ட ஸ்பெஷலான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணி மட்டும் போட்டி நடைபெறும் துபாய் சர்வதேச மைதானத்தில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பார்ம் ஜமைரா என்கிற 8 நட்சத்திர சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அனைத்து செலவுகளையும் தனிப்பட்ட முறையில் பி.சி.சி.ஐ ஏற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Palm Jumeirah

அதேபோன்று அனைத்து அணிகளும் பயிற்சியை மேற்கொள்ள ஐசிசி ஒரு மைதானத்தை ஒதுக்கி இருந்தது. ஆனால் அங்கும் கூட இந்திய அணிக்கு ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதினால் இந்திய அணி மட்டும் மாலை நேரத்தில் பயிற்சி செய்ய சிறப்பு அனுமதி வாங்கப்பட்டு அந்த நேரத்தில் மட்டுமே இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான செலவுகளையும் பி.சி.சி.ஐ ஏற்றுக்கொண்டுள்ளது.

- Advertisement -

அதுமட்டும் இன்றி நட்சத்திர ஹோட்டலில் இந்திய வீரர்களின் உணவு, பொழுதுபோக்கு மற்றும் இதர செலவுகள் அனைத்தையும் பிசிசிஐ ஏற்றுள்ள வேளையில் தனியாக ரிசார்ட்டில் தங்கி உள்ளதால் அங்கிருந்து போட்டிகளுக்கு வரும் பயண செலவு மொத்தத்தையும் பி.சி.சி.ஐ ஏற்றுள்ளதாக தெரிகிறது. இப்படி இந்திய அணி சொகுசு நட்சத்திர விடுதியில் தங்குவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது கூட இதே ரிசார்ட்டில் தான் இந்திய அணி தனியாக புக் செய்து தங்கியது.

இதையும் படிங்க : INDvsPAK : போன வருஷம் நடந்தத மறக்க முடியல. கண்டிப்பா பதிலடி குடுப்போம் – கே.எல் ராகுல் அதிரடி பேட்டி

அந்த வகையில் இம்முறை ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கும் பல ஸ்பெஷல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளரான ஜெய் ஷா தான் என்று கூறப்படுகிறது. உலகிலேயே அதிக பணம் கொழிக்கும் கிரிக்கெட் நிர்வாகமாக பார்க்கப்படும் பிசிசிஐ இப்படி இந்திய அணியை மற்ற அணிகளிடம் இருந்து பிரித்து தனியாக தங்க வைத்திருப்பது ஒரு பக்கம் விமர்சனத்தையும் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement