- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2021இல் விராட் கோலிக்கு செய்த அநியாயத்தை இன்று நியாயமாக மாற்றிய பிசிசிஐ.. விவரம் இதோ

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் 3 வகையான இந்திய அணிக்கும் 3 விதமான கேப்டன்களை நியமித்து பிசிசிஐ வரலாறு காணாத முடிவை எடுத்துள்ளது. தோனிக்குப் பின் 2017 முதல் முழு நேர கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தலைமையில் இருதரப்பு தொடர்களில் சக்கைப் போடு போட்ட இந்தியா ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திணறியது.

இதற்கிடையே ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி தலைமையில் பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடியது. அதனால் விராட் கோலி இருக்கும் வரை இந்தியா கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் வந்தன. அதன் காரணமாக 2021 டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விடை பெறுவதாக விராட் கோலி அறிவித்தார்.

- Advertisement -

அன்றைய அநியாயம்:

இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் அப்போது விராட் கோலியிடம் இருந்து ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பை வலுக்கட்டாயமாக பறித்த கங்குலி தலைமையிலான பிசிசிஐ அதை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதற்கு வெள்ளைப்பந்து (ஒருநாள், டி20) கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்று தேர்வுக் குழுவினர் கருதுவதாக தெரிவித்தார்.

அதனாலேயே விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பை பறித்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்ததாகவும் கங்குலி கூறினார். அதன் காரணமாக மனமுடைந்த விராட் கோலி பணிச்சுமையை காரணமாகச் சொல்லி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்தார். அன்றைய நாளில் விராட் கோலிக்கு பிசிசிஐ மற்றும் சௌரவ் கங்குலி அநியாயம் செய்து விட்டதாக அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர்.

- Advertisement -

இன்றைய நியாயம்:

அப்படியே காலங்கள் உருண்டோடிய நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ரோஹித் சர்மாவும் விராட் கோலி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதனால் டி20 கேப்டனாக சூரியகுமார் நியமிக்கப்பட்டார். ஆனால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் ரோஹித் தலைமையில் இந்தியா அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது. அதனால் அடுத்த இங்கிலாந்து தொடரில் ரோஹித், விராட் கோலியை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது.

இதையும் படிங்க: ஒன்டே மேட்ச்ல நல்லா தான் ஆடுறாரு.. அதுக்காக என்ன பண்றது? ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம் குறித்து – அகார்கர் பேட்டி

அதற்கு முன்பாக அவர்களாகவே மரியாதையுடன் ஓய்வு பெற்றனர். அதனால் தற்போது டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர உள்ளார். தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு பிசிசிஐ 2 வெவ்வேறு கேப்டன்களை (ரோஹித், சூரியகுமார்) நியமித்துள்ளது. அதனால் இந்த முடிவு மட்டும் நியாயமா? என்று விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வினவுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -