ஒன்டே மேட்ச்ல நல்லா தான் ஆடுறாரு.. அதுக்காக என்ன பண்றது? ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கம் குறித்து – அகார்கர் பேட்டி

Agarkar and Shreyas
- Advertisement -

எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று மே 24-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20-ஆம் தேதி இங்கிலாந்து மண்ணில் துவங்கவுள்ள இந்த டெஸ்ட் தொடரானது 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக அமைந்துள்ளதால் இந்த தொடரில் வெற்றி பெற்று இந்த தொடரை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் டெஸ்ட் அணியில் இடமில்லை? : அஜித் அகார்கர்

ஏற்கனவே இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதால் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார்? மேலும் அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் பலரது மத்தியிலும் நிலவி வந்தது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கான விடையாக இன்று இந்த இங்கிலாந்து தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் அவர்களுக்கு கீழ் 16 பேர் கொண்ட அணியையும் நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதில் பல முக்கிய வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

குறிப்பாக முகமது ஷமி, சர்பராஸ் கான், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக சமீபகாலமாகவே மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படவில்லை? என்பது குறித்து தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சமீப காலமாகவே ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் அதில் சந்தேகமே இல்லை. அதேபோன்று டொமஸ்டிக் கிரிக்கெட்டிலும் அவர் மிகச்சிறப்பாக தான் விளையாடியுள்ளார். ஆனால் இதையெல்லாம் வைத்து அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கொடுத்து விட முடியாது.

இதையும் படிங்க : இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் முகமது ஷமியை தேர்வு செய்யாதது ஏன்? – அஜித் அகார்கர் விளக்கம்

தற்போதைக்கு டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை. ஏனெனில் போதுமான அளவு பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெற்றிருப்பதால் யாருக்கு பதிலாக அவருக்கு இடம் கொடுக்க முடியும்? அதனால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடியாத நிலையில் தான் அவரை அணியிலிருந்து கழட்டி விட்டுள்ளோம் என அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement